»   »  நட்சத்திர கிரிக்கெட் போட்டி: விஷாலுக்காக வந்த 'நாட்டாமை' மகள்!

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: விஷாலுக்காக வந்த 'நாட்டாமை' மகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரத்குமார், ராதிகா உள்ளிட்ட யாரையும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கும் இடத்தில் பார்க்க முடியவில்லை. ஆனால் சரத்குமாரின் மகள் வரலட்சுமி மட்டும் சந்தோஷமாக வந்து போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியிடம் சரத்குமார் தலைமையிலான அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் ஆகாமல் உள்ளது. இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சரத்குமார் மற்றும் அவரது தீவிர ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

Natchathira cricket league: Father ditches, daughter admires

போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் சரத்குமார், ராதிகா, ராதாரவி உள்ளிட்டோரை பார்க்க முடியவில்லை. ஆனால் சரத்குமாரின் மகள் வரலட்சுமி மட்டும் தனது நெருங்கிய நண்பர் விஷாலுக்காக போட்டியை காண வந்துள்ளார்.

முன்னதாக வரலட்சுமி கிரிக்கெட் அணிகள் மற்றும் வீரர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சிக்கும் வந்திருந்தார். நிகழ்ச்சியில் அவர் விஷால் அருகே தான் அமர்ந்திருந்தார்.

தந்தைக்கு பிடிக்காவிட்டாலும் விஷாலுடன் ஒட்டி உறவாடி வருகிறார். நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Though Sarath Kumar has stayed away from Natchathira cricket league, his daughter Varalakshmi is very much in the venue watching matches.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil