»   »  விஜயகாந்த்துக்கு நவ்னீத் கெளர்!

விஜயகாந்த்துக்கு நவ்னீத் கெளர்!

Subscribe to Oneindia Tamil

தெலுங்கு தேசத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் சிக் நாயகி நவ்னீத் கெளர், வித்தகன் படத்தில் விஜயகாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கேப்டன் விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் வித்தகன். இதை பிரமாண்டமாக எடுத்து வருகிறார்கள். விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார். மாதேஷ் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் மோனிகா பேடி நடிக்கிறார். தற்போது நவ்னீத் கெளர் என்ற அழகிய ராட்சசியை ஆந்திராவிலிருந்து கூட்டி வந்துள்ளனர்.

மும்பையில் பிறந்தவர் இந்த கெளர். ஆனால் பூர்வீகம் பஞ்சாப். தெலுங்கு சினிமாவை இப்போது கலக்கி வருகிறார் நவ்னீத் கெளர். தெலுங்கில் அவர் நடித்த சீனு, வசந்தி, லட்சுமி என்ற படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடடா, என்ன அழகு, என்ன அழகு என்று ஆந்திரத்து ரசிகர்கள் அணல் பறக்க கெளரை ரசித்துக் கொண்டுள்ளனர்.

அதேபோல சத்ருவு, ஜகபதி ஆகிய படங்களிலும் கெளர், களேபரம் செய்திருந்தார். கிளாமரிலும், நடிப்பிலுமாக பின்னிப் பெடலெடுக்கும் கெளரின் திறமைகளை அறிந்த மாதேஷ், அவர் குறித்து கேப்டன் காதைக் கடிக்க, அவரும் கண்ணசைத்து பச்சைக் கொடி காட்ட, இப்போது கெளர், வித்தகனில் விஜயகாந்த்துக்கு ஜோடியாகியுள்ளார்.

கடந்த வாரம் ஹைதராபாத் போய் நவ்னீத் கெளரை சந்தித்தார் மாதேஷ். பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்து ஓ.கே. சொல்லி விட்டாராம் கெளர். இன்னும் சில தினங்களில் சென்னைக்கு வந்து போட்டோ செஷனை அட்டெண்ட் செய்யவுள்ளார்.

இப்படத்தின் பெரும் பகுதியை கனடாவில் வைத்து சுடவுள்ளனர். இதற்காக விஜயகாந்த் கனடா செல்லவுள்ளார். கூடவே நாயகியும் பயணிக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil