»   »  நவ்யா மீரா போட்டா போட்டி

நவ்யா மீரா போட்டா போட்டி

Subscribe to Oneindia Tamil

நவ்யா நாயருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் இடையே சத்தம் போடாமல் ஒரு போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டி தமிழ், மலையாளம் ஆகியவற்றைத் தொடர்ந்து கன்னடத்திற்கும் இடம் பெயர்ந்துள்ளதாம்.

மலையாள மல்லிச் செண்டுகளான நவ்யா நாயருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் இடையே மலையாளத்தில் கடும் போட்டி நிலவியது. இதனால் நவ்யா நாயர் தமிழ் பக்கம் கவனத்தைத் திருப்பினார்.

விடுவாரா மீரா. அவரும் தமிழுக்கு வந்தார். இங்கும் இருவரும் முட்டி மோதினர். இதில் நவ்யா சற்றே பின் தங்கவே மீரா படு வேகமாக முன்னேறி இப்போது திருமகன் மூலம் நடிப்பிலும் கலக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த நிலையில் இவர்களின் போட்டி இப்போது கன்னடத்திற்கும் தாவியுள்ளது. தமிழில் சரத் நடிப்பில் வெளியான அரசு கன்னடத்தில் ரீமேக் ஆனது. அதில் சிம்ரன் தமிழில் நடித்திருந்த கேரக்டரில் மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார்.

தற்போது நவ்யாவும் கன்னடத்திற்கு வந்துள்ளார். கஜா என்ற படத்தில் இளம் நடிகர் தர்ஷனுக்கு ஜோடியாக நடிக்கிறார். முதலில் மலையாளம், பின்னர் தமிழ், இப்போது கன்னடம் என இவர்களின் போட்டி தொடருவதால் இது எங்கே போய், எப்படி முடியுமோ என்று கோலிவுட்டில் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நடிப்பில்தான் இருவருக்கும் போட்டியே தவிர தனிப்பட்ட முறையில் சேச்சிகள் இருவரும் ஷேமமான நட்பை மெயின்டெய்ன் செய்து வருகிறார்களாம். ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவது கிடையாது, அநாகரீகமாக வதந்தி கிளப்புவது கிடையாதாம்.

அதுதான் மலையாள வெவரம்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil