»   »  கிளாமருக்கு ரெடியாகும் நவ்யா

கிளாமருக்கு ரெடியாகும் நவ்யா

Subscribe to Oneindia Tamil

தமிழில் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கும் நவ்யா நாயர் இப்போது கன்னடத்திலும் நுழைந்துவிட்டார்.

தமிழில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற படத்தில் நல்ல குடும்ப பங்கான வேடத்தில் நடித்த நவ்யா தொடர்ந்து சில படங்களில் தலையை காட்டினார்.

நீண்ட நாட்களாக சேரனின் இயக்கம் ப்ளஸ் நடிப்பில் உருவான மாயக்கண்ணாடியில் நடித்து வந்தார். இதனால் தமிழில் ஒரு சில பட வாய்ப்புகளையும் அவர் இழந்தார்.

ஆனால் மாயக்கண்ணாடி வந்த வேகத்தில் மாயமாக போனது. இந் நிலையில் இப்போது நவ்யாவிடம் இருக்கும் ஒரே தமிழ்ப் படம் கண்கள் மறப்பதில்லை தான்.

நிலைமை மோசமாகிவிட்டதை உணர்ந்துவிட்ட நவ்யா தன்னைத் தேடி வந்த கன்னட வாய்ப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார். கன்னடத்தில் கஜா என்ற படத்தில் திறமை காட்டி வருகிறார்.

கண்கள் மறப்பதில்லை படத்தில் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தில் நடித்து வருகிறாராம் நவ்யா. இைதத் தொடர்ந்து தனது தாய்ெமாழியான மலையாளத்தில் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறாராம்.

இதுவரை கிளாமர் ரோல் எதிலும் நடித்திராத நவ்யா இனிமேல் அந்த ஏரியாவிலும் நுழையத் திட்டமிட்டுள்ளாராம் (வாய்ப்பு போன எல்லோரும் செய்வது தான்).

இதனால் கிளாமருக்கு ரெடி என கோலிவுட்டில் தகவல் பரப்பிக் கொண்டிருக்கிறார்.

நவ்யா நிலைமை இப்படி ஆயிருச்சே

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil