»   »  செல்லைத் தொலைத்த நவ்யா!

செல்லைத் தொலைத்த நவ்யா!

Subscribe to Oneindia Tamil

நவ்யா நாயரின் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் தொலைந்து போய் விட்டதாம். இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மாயக்கண்ணாடிக்குப் பிறகு தமிழில் சில நேரங்களில் என்ற படத்தில் நடித்து வருகிறார் நவ்யா நாயர். பழம்பெரும் வில்லன் நடிகரான மறைந்த அசோகனின் மகன் வின்சென்ட் அசோகன்தான் இதில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வருகிறார் நவ்யா.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை மெமோரியல் ஹால் பகுதியில் நடந்தது. நவ்யா நாயர் கலந்து கொண்டு நடித்தார். படப்பிடிப்பு முடிந்து பார்த்ததபோது அவரது செல்போனைக் காணவில்லை என்று தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்தார் நவ்யா. இந்த போனின் விலை ரூ. 20 ஆயிரம் என்று கூறப்படுகிறது. அதில்தான் தனக்குத் தொடர்புடைய அனைத்து எண்களையும் பதிவு செய்து வைத்துள்ளாராம் நவ்யா.

போன் காணாமல் போனது குறித்து உடனடியாக போலீஸில் புகார் கூற முடியாத அளவுக்கு வெளியூர் வேலைகள் இருந்ததால் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று நவ்யா நாயரின் மேலாளர் செல்போன் தொலைந்து போனது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே நமீதாவின் செல்போனை ஒரு காக்கா தூக்கிச் சென்று விட்டதாக நமீதா போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் அந்தக் காக்காவையும் கண்டுபிடிக்க முடியவில்லை, செல்போனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நவ்யா நாயரின் செல்போன் தொலைந்து போயுள்ளதாக புதிய புகார் போலீஸாரிடம் வந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil