TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
மீண்டும் நடிக்க வந்தார் நவ்யா... பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் நடிக்கிறார்!
திருமணமாகி குழந்தை பெற்று செட்டிலான நவ்யா நாயர் மீண்டும் நடிக்கிறார். பி வாசு இயக்கத்தில் கன்னடத்தில் அவர் நடிக்கிறார்.
நடிகை நவ்யா நாயர், கேரளாவை சேர்ந்தவர். மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர், 'அழகிய தீயே' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தார்.
திருமணம்
சில வருடங்களுக்கு முன்பு அவர், பெங்களூரில் வசிக்கும் ஒரு சாப்ட்வேர் எஞ்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
மீண்டும் நடிப்பு
பெங்களூரில் கணவர் - குழந்தையுடன் குடும்பம் நடத்தி வந்த நவ்யா நாயர், மீண்டும் நடிக்க வருகிறார். ஒரு கன்னட படத்தின் மூலம் திரையுலகுக்கு அவர் மறுபிரவேசம் செய்கிறார்.
த்ரிஷ்யம் ரீமேக்
கேரளாவில் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்' என்ற மலையாள படத்தின் ‘ரீமேக்'கில்தான் அவர் நடிக்கிறார். இதே படத்தின் தமிழ் பதிப்பில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். கன்னட படத்தில், ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். பி வாசு இயக்குகிறார்.
வாசு பேட்டி
இதுபற்றி பி வாசு கூறுகையில், "த்ரிஷ்யம் படத்தில், மோகன்லால் ஜோடியாக மீனா மிக சிறப்பாக நடித்து இருந்தார். அவரையே கன்னட படத்திலும் நடிக்க வைக்கலாம் என்று முதலில் திட்டமிட்டு இருந்தேன்.
உடனே ஒப்புக் கொண்டார்
ஆனால், ‘த்ரிஷ்யம்' படத்தின் தெலுங்கு பதிப்பில் மீனா நடிப்பதால், அவரைப் போன்ற குடும்பப் பாங்கான கதாநாயகி ஒருவர் தேவைப்பட்டார். அதற்கு நவ்யா நாயர் பொருத்தமாக இருப்பார் என நினைத்துக் கேட்டேன். அவரும் நடிக்க உடனே ஒப்புக் கொண்டார்," என்றார்.