»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நவ்யா நாயர் நடித்துக் கொண்டிருக்கும் அழகிய தீயே படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

மலையாளத்தில் சம்சாரித்துக் கொண்டிருந்த நவ்யா நாயரை அழகிய தீயே படத்துக்காக தமிழுக்கு அழைத்துவந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். ஆர்ப்பாட்டமில்லாத அழகு, பேசும் கண்கள் என அசத்துகிறார் நவ்யா.மலையாளத்தில் ஆறேழு ஹிட் படங்களைக் கொடுத்து, முன்னணியில் இருந்த இவருக்கு ஆசையெல்லாம் தமிழ்மீது இருக்க பிரகாஷ்ராஜ் மூலம் வாய்ப்பு கிடைத்தது.

பைவ் ஸ்டார், ரகசியமாய் ஆகிய படங்களில் நடித்த பிரசன்னாதான் இந்தப் படத்தில் அழகிய தீயே என்று நவ்யாநாயரைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பெரியார்தாசன், பிரமிட் நடராஜன்,தேவதர்ஷினி, ஷர்மிலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

முதலில் கூத்துப்பட்டறை என்று பெயரிட்டு பின்னர் அதை எல்லாமே டிராமாதான் என்று மாற்றி, இப்போதுஅதையும் மாற்றி அழகிய தீயே என்று பெயர் வைத்துள்ளார்கள்.

பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் ராதாமோகன்.இவரது கதை, திரைக்கதைக்கு ரமேஷ் விநாயகம் இசையமைக்கிறார்.

மைசூர், மங்களூர், புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படத்திற்கு பின்னணிஇசை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் திரைக்குக் கொண்டு வர மொத்த யூனிட்டும் மும்முரமாகஉள்ளது.

இந்தப் படம் தமிழில் நல்ல பெயரைத் தரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நவ்யா.

கேரளத்திலிருந்து தமிழுக்கு வந்த காவ்யா மாதவன், திவ்யா உன்னி, சம்யுக்தா வர்மா, அபிராமி, மீரா ஜாஸ்மின்,கோபிகா உள்ளிட்ட நடிகைகள் யாரும் நடிப்பிலோ, அழகிலோ சோடை போனதில்லை. ஆனால் என்னகாரணத்தினாலோ பத்மினி, கே.ஆர்.விஜயா, ரேவதியைத் தவிர சமீப காலங்களில் தமிழுக்கு வந்த மலையாளநடிகைகளால் கோடம்பாக்கத்தில் நிலையான இடத்தைப் பிடிக்க முடிவதில்லை.

நவ்யா நாயராவது பிடிப்பாரா என்று பார்ப்போம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil