»   »  சினிமா விழாக்களுக்கே வராத நயன், அம்மா ஸ்போர்ட்ஸ் அம்பாசிடரானார்!

சினிமா விழாக்களுக்கே வராத நயன், அம்மா ஸ்போர்ட்ஸ் அம்பாசிடரானார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தான் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கே வரமாட்டேன் என்று அடம் பிடிப்பவர் நயன்தாரா. இதற்காக ஆந்திர சினிமாவில் இவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இருந்தும் தனது பிடிவாதத்தை விடாமல் இருக்கிறார்.

அப்படிப்பட்ட நயன்தாரா ஒரு விழாவில் கலந்து கொண்டதோடு, அந்த அமைப்பின் விளம்பரத் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Nayan becomes Amma sports Ambassador

அந்த அமைப்பு அம்மா ஸ்போர்ட்ஸ் பவுன்டேஷன். இதன் முதாலம் ஆண்டு விழாவில் அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், முன்னர் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி, ஸ்ரீகாந்த், முன்னாள் ஹாக்கி கேப்டன் வி.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் நயன்தாராவுடன், சினேகா, பிரசன்னா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.

மிகவும் எளிமையாகவும், தனக்கே உரிய ஸ்டைல் பாணியிலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நயன்தாரா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.இந்த அமைப்பின் விளம்பரத் தூதராகவும் நயன்தாராவை அறிவித்தனர். அவரும் அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்.

இதே புன்னகையுடன் சினிமா விழாக்களுக்கும் இனி வருவாரா நயன்தாரா?

English summary
Actress Nayanthara has appointed as the brand ambassador of Amma Sports.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil