»   »  'ஜவுளி'க்கு நோ சொன்ன நயன்!

'ஜவுளி'க்கு நோ சொன்ன நயன்!

Subscribe to Oneindia Tamil
Nayanatara

ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க முடியாது என்று நயனதாரா மறுத்து விட்டாராம்.

டிவி விளம்பரத்தில் நடிப்பதில்லை, டிவிகளுக்கு பேட்டி கொடுப்பதில்லை என்பதை பாலிசியாகவே வைத்துள்ளவர் நயனதாரா. இதுவரை அவரது பேட்டி ஒரு டிவியிலும் (தெலுங்கு-மலையாளத்தில் எப்படி என்று தெரியவில்லை) வந்ததில்லை. அதேபோல அவர் எந்த விளம்பரப் படத்திலும் நடித்ததில்லை.

தற்போது நயனதாராவை விளம்பரப் படத்தில் நடிக்க வைக்க சென்னையைச் சேர்ந்த முன்னணி ஜவுளி நிறுவனம் மும்முரமாக முயன்று வந்தது.

இதற்காக மிகப் பெரிய தொகையை தரவும் அந்த நிறுவனம் தயாராக இருந்ததாம். ஆனால் நயனதாராதான் முடியவே முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம்.

நயனதாரா சரிப்பட மாட்டார் என்று தெரிய வந்தவுடன் இப்போது ஷ்ரியாவை அந்த நிறுவனம் புக் செய்துள்ளதாம்.

ஏற்கனவே ஒரு மிகப் பெரிய நகைக் கடையின் 9 நிமிட விளம்பரப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் நயனதாரா நிராகரித்து விட்டாராம். அதேபோல ஒரு முன்னணி குளிர்பான நிறுவனத்தின் விளம்பரப் பட வாய்ப்பையும் அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு நிராகரித்தார்.

நயனதாராதான் இப்படி விளம்பரங்களில் நடிக்க முடியாது என்று பிடிவாதமாக உள்ளார். ஆனால் சக போட்டியாளினிகளான திரிஷா, ஆசின், மீரா ஜாஸ்மின், நிலா, ஷ்ரியா, சினேகா ஆகியோர் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் சைடு துட்டை அள்ளிக் கொண்டுள்ளனர்.

அதிலும் சினேகா விளம்பரப் படங்களில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் விளம்பரம் வராத டிவியே இல்லை என்று கூறும் அளவுக்கு ஏகப்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளார் சினேகா.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil