»   »  நயனதாராவின் ராசி

நயனதாராவின் ராசி

Subscribe to Oneindia Tamil

அது என்ன ராசியோ. நயனதாராவுக்கு இளமை இருக்கிறது, அழகிருக்கிறது. ஆனால், அவர் ஜோடி சேருவது எல்லாமே ரம்யா கிருஷ்ணன்போன்றவர்கள் நடிக்க வேண்டிய பார்ட்டிகளுடன் தான்.

கேரளத்தில் வனிதா வார இதழில் இவரது படம் வெளியாக, அப்படியே மாடலிங்குக்குள் இழுக்கப்பட்ட நயன்தாரா பின்னர்மலையாளத்தில் மனசினக்கரே படத்தின் மூலமும் சினிமாவுக்குப் போனார்.

தமிழில் ஐயா படம் மூலம் நடிகையாகிவிட்டார். நயனதாரா பார்க்க ஒரு ஸ்கூல் கேர்ள் மாதிரி தான் இருக்கிறார். அத்தனை இளமை.

ஆனால், இதுவரை தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்துள்ள படங்கள் அனைத்திலும் மூத்த நடிகர்கள்தான் அவருக்கு ஜோயாகநடித்துள்ளனர்.

மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம் போன்ற பெரிசுகளுடனும் தமிழில் சரத்குமார் (படம்- ஐயா), இப்போது சந்திரமுகியில்ரஜினியுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து இப்படி மூத்த நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேர வாய்ப்பு கிடைக்கிறதே. எப்போது சூர்யா, தனுஷ், மாதவன், விஜய் என்றுபோகப் போகிறீர்கள் என்று கேட்டால்,

என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? என்னிடம் மெச்சூர்டான தோற்றம் தெரியவில்லையா?

என் வயதை மீறிய இந்த மெச்சூர்ட், அதே நேரத்தில் அழகிய தோற்றம் காரணமாகவே மூத்த நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்க வாய்ப்புவருகிறது. இதை நான் சந்தோஷமாகத்தான் எடுத்துக் கொள்கிறேன். (அட..)

மூத்தவர்களுடன் சேர்ந்து நடிப்பதால் நல்ல அனுபவம் கிடைக்கிறது. அதனால் மகிழ்ச்சியாகவே நடித்து வருகிறேன். (அடடே..)

ஐயா படத்தில் சில காட்சிகளில் நான் கவர்ச்சியாக வந்ததாக கூறுகிறார்கள். உண்மையில் அதை கவர்ச்சி என்றே கூற முடியாது. அதேபோலசந்திரமுகியிலும் எனக்கு கெளரவமாக வேடம் தான்.

அதற்காக கவர்ச்சி காட்ட மாட்டேன் என்றெல்லாம் நீங்களாக முடிவு கட்டிவிடாதீர்கள். தேவைப்படும்போது என் இளமையும்விளையாடும் என்றார் நயனதாரா.

ரஜினியின் தீவிர ரசிகையாம் நயனாதாரா. இப்போது அவருடனே ஜோடியாக நடிப்பதால் ரொம்பவே புளாகாங்கிதப்பட்டுப் போய்க்கிடக்கிறார்.

இதற்கிடையே சந்திரமுகியில் ஜோதிகாவுக்கு இணையாக இவரது கேரக்டருக்கும் மெருகு கூட்டப்பட்டு வருகிறதாம். ரஜினியிடமும்இயக்குனர் வாசுவிடமும் சிணுங்கியே படத்தில் தனக்கு மேலும் இரு பாடல்களை சேர்க்க வைத்துவிட்டார் நயன்.

ஆனாலும் ஐயா படத்தில் நடிக்கும்போது, தமிழ் கற்றே ஆக வேண்டும் என்று இயக்குனர் ஹரி கணடிப்பாகக் கூறிவிட்டதால் வேறுவழியில்லாம் தமிழில் பேசவும் படிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார் நயனதாரா.

இவர் கிசுகிசுக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாராம். அதே போல திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை என்கிறார்.

அதையுந் தான் பார்ப்போமே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil