»   »  ஆ ஊ நயனதாரா

ஆ ஊ நயனதாரா

Subscribe to Oneindia Tamil

சாயந்திரத்திற்கு மேல் நயனதாராவை யாராவது பார்க்க நேர்ந்தால் முதலில் இந்த சத்தைத்தான் கேட்க வேண்டும்.

காரணம், கராத்தே, குங் ஃபூ என தற்காப்புக் கலைகளை கற்க ஆரம்பித்துள்ளார் நயன்ஸ்.

சிம்பு, வம்புக்குப் பின்னர் மீண்டும் கோலிவுட் திரும்பியுள்ளார் நயனதாரா.

இந்த முறை, சிம்புவுக்கு ஆகாத தனுஷுடன் ஜோடி போட்டு யாரடி நீ மோகினி படத்தில் நடிக்கிறார் நயனதாரா.

இது தனுஷின் அண்ணன் செல்வராகவன் தெலுங்கில் தற்போது இயக்கி வரும் படத்தின் ரீமேக்தான். படப்பிடிப்பு படு அமைதியாக சென்னையில் நடந்து வருகிறது.

பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

படத்தில் நயனதாராவுக்கு தற்காப்புக் கலைகளை காதலிக்கும் பெண் வேடமாம். காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜமாலுமே சில தற்காப்புக் கலைகளை கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என இயக்குநர் விரும்ப ஓ.கே. என்று தலையாட்டி விட்டார் நயனதாரா.

இதையடுத்து தினசரி படப்பிடிப்பு முடிந்தவுடன், சாயங்காலம் தற்காப்புக் கலைக்காக ஒதுக்கி கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளார் (இப்பத்தான் நிறைய நேரம் இருக்கிறதே). தி.நகரில் உள்ள ஒரு தற்காப்புக் கலை மையத்திற்கு விசிட் அடித்து அங்கு குங் ஃபூ, கராத்தே ஆகியவற்றை கற்றுக் கொள்கிறார் நயனதாரா.

படத்துக்காகத்தான் இந்தக் கலைகளை கற்கிறார் என்றாலும் கூட முக்கியமான பல மேட்டர்களை, அதாவது, எதிரி நம்மை வழிமறித்துப் பேச முயன்றால் எப்படித் தாக்கலாம், வம்பு செய்கிறவர்களை எப்படி சமாளிப்பது போன்ற அதி முக்கியமான விஷயங்களை படு ஆர்வமாக கற்றுக் கொள்கிறாராம்.

படத்துக்கு மட்டுமல்லாமல், நிஜத்துக்கும் பயன்படுமே என்ற அக்கறையில் நயன்ஸ் இருப்பதாக பயிற்சி மையத்தினர் நம்மிடம் கிசுகிசுத்தனர்.

வம்புப் பார்ட்டிகளே சாக்கிரதைங்கோ!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil