»   »  குண்டாயிட்டேன்-நயனதாரா வருத்தம்

குண்டாயிட்டேன்-நயனதாரா வருத்தம்

Subscribe to Oneindia Tamil

காதலர்களுக்கிடைய நல்ல புரிதலும், பகிர்தலும் இருந்தால் நிச்சயம் வெல்லலாம். எந்த சக்தியாலும் அந்தக் காதலை பிரிக்க முடியாது என்று நயனதாரா கூறியுள்ளார்.

வல்லவன் படத்தில் சிம்புவுடன் ஏற்பட்ட காதலும், பின்னர் அது முறிந்ததால் ஏற்பட்ட வேதனையிலும் தமிழ் சினிமாவை விட்டு சற்றே ஒதுஙகியிருந்த நயனதாரா இப்போது இரு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

இருக்கும் இடமே தெரியாமல் படு அமைதியாக ஷூட்டிங்குகளுக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறார் நயனதாரா. செய்தியாளர்களைக் கூட சந்திப்பதில்லை. யாராவது பேட்டிக்கு முயன்றாலும் கூட மறுத்து விடுகிறார்.

ஆனால், தெலுங்குப் படப்பிடிப்புகளில் மட்டும் நிருபர்களிடம் ப்ரீயாக பேசுகிறார்.

அந்த வகையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் ேபசினார். அவரது பேச்சில் முழுக்க முழுக்க தத்துவங்கள் தாண்டவமாடின.

குறிப்பாக காதல் குறித்து நிறையப் பேசியிருக்கிறார். காதல் என்பது உணர்ச்சிகளின் சங்கமம். காதல் வந்தால் கூடவே சுகம், சோகம், வேதனை, துக்கம் என எல்லாமே வரும். எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ளும் மனப் பக்குவம் வர வேண்டும்.

நல்ல காதல் நிச்சயம் வெல்லும். காதல் வெல்ல, புரிதலும், பகிர்தலும் கண்டிப்பாக அவசியம். அவை இரண்டும் இருந்தால் அந்தக் காதலை வீழ்த்த யாராலும் முடியாது, எந்த தீய சக்தியாலும் முடியாது.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையாக இருந்தால்தான் காதலில் ஜெயிக்க முடியும். இதை எனது அனுபவத்தைக் கொண்டு நான் சொல்லவில்லை. அனுபவித்தவர்கள் மூலமாக கேட்டதுதான் இவை.

நான் எப்போதும் போலவே இருக்கிறேன். முன்பு போல உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. இதனால் லேசாக குண்டடித்து விட்டேன். முன்பை விட இப்போது அமைதியை அதிகம் விரும்புகிறேன். பேச்சைக் குறைத்து விட்டேன்.

எனக்கென்று ஒரு இணையதளத்தைத் தொடங்கியுள்ளேன். அதில் எனக்கு நிறைய மெயில்கள் வருகின்றன. பெரும்பாலானவை ஐ லவ் யூ ரக மெயில்கள்தான். ஆண்கள்தான் அதிகம் அனுப்புகின்றனர். அனைவருக்கும் தேங்க்ஸ் என்ற பதிலைத்தான் தருகிறேன் என்றார் நயனதாரா.

ரொம்பவே மெச்சூர்டாகி விட்டார் நயனதாரா!

Please Wait while comments are loading...