»   »  நயனதாராவின் 200 நாள்!!

நயனதாராவின் 200 நாள்!!

Subscribe to Oneindia Tamil

நடிகைகள் யாரும் செய்திராத ஒரு புதிய சாதனையை நயனதாரா படைத்துள்ளார்.

சிம்பு, வம்பு, நொம்பலம், புலம்பல்களுக்குப் பிறகு சத்தம் போடாமல் தனது கேரியரை தெலுங்குக்கு மாற்றினார் நயனதாரா. அங்கு நடித்து வந்த அவர், தமிழில் நடிக்கவும் ஒப்புக் கொண்டார். அதேசமயம், படப்பிடிப்புகளை சென்னையில் வைக்கக் கூடாது, வெளியில் எங்காவதுதான் வைக்க வேண்டும் என நிபந்தனை போடுகிறார்.

சிம்புவை தப்பித் தவறிக் கூட எங்கும் சந்தித்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இதற்காகவே, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நட்சத்திரக் கலை விழாவில் கூட பங்கேற்காமல் தவிர்க்கப் போகிறாராம் நயனதாரா.

சிம்புவை விட்டுப் பிரிந்த பின்னர் யாரடி நீ மோகினி படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்திருந்த நயனதாரா, ஹோட்டல் பார்க்கில் தங்கியிருந்தார். அவரைப் பார்த்து சமரசப்படுத்த சிம்பு முயன்றார். இதை அறிந்த நயனதாரா, பார்க்க விரும்பவில்லை என்று சிம்பு அனுப்பிய தூதர்களிடம் கூறி விட்டார்.

இந்த நிலையில், திடீரென ஒரு நாள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வந்து விட்டார் சிம்பு. இதை அறிந்த நயனதாரா உள்ளுக்குள்ளேயே அடைந்து கொண்டார். சிம்புவோ, கதவைத் தட்டியபடி இருந்தார்.

பின்னர் ஒரு வழியாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர முயன்றபோது நயனதாரா சத்தம் போட்டுக் கத்தி, சிம்புவை அங்கிருந்து விரட்டி விட்டார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் சென்னையில் ஷூட்டிங் என்றாலே அலர்ஜியாகி விடுகிறார் நயனதாரா. அதேபோல ஹைதராபாத்தையும் அவர் நம்பவில்லை. முடிந்த அளவுக்கு வெளிநாடுகளிலேயே ஷூட்டிங் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்.

தற்போது அவர் நடித்து வரும் யாரடி நீ மோகினி, பில்லா ஆகிய படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே நடந்துள்ளது. இந்தப் படங்களின் ஷூட்டிங்குக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வெளிநாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார் நயனதாரா. இடையிடையே சில வாரங்கள் மட்டுமே இந்தியா பக்கம் வந்துள்ளார்.

கிட்டத்தட்ட 200 நாட்களாக அவர் வெளிநாடுகளிலேயே தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இத்தனை நாள் எந்த நடிகையும் வெளிநாடுகளில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டதில்லை என்பதால் இது ஒரு புதிய சாதனையாக கூறப்படுகிறது.

முதலில் தெலுங்குப் படமான பாஸ் படப்பிடிப்புக்காக நவம்பரில் வெளிநாடு போனார் நயனதாரா. கனடாவில் அப்படத்தின் ஷூட்டிங் நடந்தது. பிறகு யோகி படத்துக்காக எகிப்துக்குப் போனார். அதன் பின்னர் துபாய் சீனு படத்திற்காக ஐரோப்பாவுக்குப் பறந்தார்.

பிறகு யாரடி நீ மோகினி படத்துக்காக சென்னைக்கு வந்தார். சில நாட்கள் இங்கு தங்கி நடித்தார். பிறகு பாங்காக்குக்குப் படப்பிடிப்பு இடம் மாறியது. பின்னர் பில்லாவுக்காக மலேசியாவுக்கு வந்தார். கிட்டத்தட்ட 2 மாதங்கள் மலேசியாவிலேயே தங்கி பில்லா படப்பிடிப்பில் பங்கேற்றார்.

பிறகு ஊர் திரும்பிய அவர் மறுபடியும் துளசி படப்பிடிப்புக்காக ஜெர்மனிக்கு 2 வாரங்கள் சென்று நடித்தார்.

மேடம், வம்புக்குப் பயந்து வானிலேயே பறந்து கொண்டிருந்தால் எப்படி?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil