»   »  மாதவனா, தனுஷா? குழப்பத்தில் நயனதாரா!

மாதவனா, தனுஷா? குழப்பத்தில் நயனதாரா!

Subscribe to Oneindia Tamil
Nayanatara
'பில்லா' சந்தோஷத்தில் இருக்கும் நயனதாராவைத் தேடி நிறையத் தமிழ்ப் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அதிலும் தனுஷ் மற்றும் மாதவன் படங்களில் நடிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பு வந்துள்ளதால் எதை ஏற்பது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளாராம் நயனதாரா.

பில்லாவில் நயனதாராவின் கிளாமரில் கலக்கியிருந்த நயனதாராவுக்கு கோலிவுட்டில் மறுபடியும் ரெட் கார்ப்பெட் விரிக்கப்பட்டுள்ளது. பில்லாவைத் தொடர்ந்து தனுஷுடன் இணைந்துள்ள யாரடி நீ மோகினி படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளார் நயனதாரா.

இந் நிலையில் நயனதாராவைத் தேடி நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் வருகிறதாம். இருந்தாலும் நல்ல கேரக்டர், நல்ல ஹீரோக்கள் என்று பார்த்து பார்த்துத்தான் நடிக்கப் போகிறாராம் நயனதாரா.

இந்த நிலையில், நான் அவனில்லை வெற்றிப் படத்தைத் தொடர்ந்து செல்வா இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு நயனாராவைத் தேடி வந்துள்ளதாம். இதில் நாயகனாக நடிப்பவர் மாதவன். பழம்பெரும் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. தயாரிக்கவுள்ளார்.

அதேபோல பொல்லாதவன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பும் நயனதாராவைத் தேடி வந்துள்ளது. இந்தப் படத்தில் நாயகன் தனுஷ்.

இரு படங்களின் கதையும் நயனதாராவுக்குப் பிடித்துள்ளதாம். ஆனால் ஒரே நேரத்தில் இரு ஹீரோக்களுடன் நடிக்க அவருக்கு யோசனையாக உள்ளதாம். எனவே யாரை நிராகரிப்பது என்ற குழப்பத்தில் உள்ளாராம் நயனதாரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil