»   »  ‘எங்கேயும் நான் இருப்பேன்’... ஹீரோயின் ஆனார் நயன்தாரா தோழி கலா கல்யாணி!

‘எங்கேயும் நான் இருப்பேன்’... ஹீரோயின் ஆனார் நயன்தாரா தோழி கலா கல்யாணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது கதிர்வேலன் காதலி படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்த கலா கல்யாணி, தற்போது எங்கேயும் நான் இருப்பேன் என்ற படத்தில் நாயகியாகியுள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்து வெளியான படம்'இது கதிர்வேலன் காதல்'. கடந்த 2014ம் ஆண்டு இப்படம் வெளியானது.

Nayantara's Friend Turns Leading Lady!

இப்படத்தின் நயன்தாராவின் தோழியாக கலா கல்யாணி என்பவர் நடித்திருந்தார். தற்போது இவர் எங்கேயும் நான் இருப்பேன் என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை மலையாள இயக்குநர் பென்னி தாமஸ் இயக்குகிறார்.

படத்தைப் பார்ப்பவர்களை பயத்தில் இருக்கையின் நுனிக்கே வரச் செய்யும் அளவிற்கு திகில் படமாம் இது. ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்படுகிறதாம்.

கலா கல்யாணி இப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிக்க இருக்கிறாரம். நல்ல கதாபாத்திரத்திற்காக இத்தனை நாள் காத்திருந்தாராம் இவர். தற்போது அந்த வாய்ப்பு கைகூடியதால் நாயகியாகி விட்டாராம்.

ஏற்கனவே, ஜோடி படத்தில் சிம்ரன் தோழியாக நடித்த திரிஷா தான், தற்போது தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். அவரைப் போலவே நயன்தாரா தோழியாக நடித்து நாயகியாக முன்னேறி இருக்கும் கலா கல்யாணியும் தமிழில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என வாழ்த்துவோம்.

English summary
Remember Nayantara's friend in the movie Idhu Kathirvelan Kadhal? Kala Kalyani, who played the second fiddle in the Udhayanidhi-starrer, is all set to play the female lead in an upcoming movie titled Engeyum Naan Iruppen.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil