மீண்டும் ஒன்று சேர்ந்த நயன்தாரா–சமந்தா... விஷயம் தெரிஞ்சா ஹேப்பி ஆகிடுவீங்க

சென்னை : காத்துவாக்கல ரெண்டு காதல் படத்தில் ஒன்றாக நடித்து வந்த நயன்தாராவும், சமந்தாவும் தற்போது சென்னையில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதன் காரணத்தை கேள்விப்பட்டதும் இருவரின் ரசிகர்களும் செம குஷியாகி விட்டனர்.

நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி மூவரும் இணைந்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்கல ரெண்டு காதல் படத்தில் நடித்து வந்தனர். இந்த படம் ஏப்ரல் 28 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக விக்னேஷ் சிவன் ஏற்கனவே அறிவித்து விட்டார். இதனால் இந்த படம் எப்போது வரும் என மூவரின் ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

டீசரை எதிர்பார்த்த ரசிகர்கள்

டீசரை எதிர்பார்த்த ரசிகர்கள்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து வருவதால் பல நாட்களுக்கு முன்பே விக்னேஷ் சிவன், ட்விட்டரில் போட்டோவுடன் போஸ்ட் போட்டார். இதனால் படத்தின் வேலைகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருவதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அடுத்து படத்தின் டீசர் வெளியிட போகிறார்கள் என எதிர்பார்த்திருந்தனர்.

மீண்டும் இணைந்த நயன்-சாம்

மீண்டும் இணைந்த நயன்-சாம்

இந்நிலையில் சென்னையில் நயன்தாராவும், சமந்தாவும் திடீரென சந்தித்துள்ளனர். என்ன காரணம் என பார்த்தால் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்காக ஒரு ஸ்பெஷல் பாடலின் ஷுட்டிங்கிற்காக தான் இருவரும் சென்னை வந்துள்ளனர். இந்த படத்தில் வரும், டூ டூ டூ பாட்டின் ஷுட்டிங்கில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூன்று பேரும் நடித்துள்ளனர்.

அட இதுக்கு தான் மீட்டிங்கா

அட இதுக்கு தான் மீட்டிங்கா

கணேஷ் ஆச்சாரியா நடனம் அமைத்த இந்த பாடல் மிகவும் ஃபன்னான, ஜாலியான பாடலாக எடுக்கப்பட்டுள்ளதாம். டூ டூ டூ பாடல் ஏற்கனவே அனிருத் ஆடி வீடியோவாக வெளியிட்டு விட்டார்கள். ஆனால் தற்போது படத்தில் வருவதற்காக இந்த ஸ்பெஷல் பாடலை இவர்களை வைத்து மீண்டும் எடுத்துள்ளார்கள். இந்த பாடலுடன் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரெண்டான போட்டோக்கள்

டிரெண்டான போட்டோக்கள்

காத்துவாக்குல ரெண்டு காதல் ஷுட்டிங் நிறைவடைந்ததை படக்குழுவினர் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். விக்னேஷ் சிவன், நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நான்கு பேரும் சேர்ந்து கேக்கை வெட்டி உள்ளனர். இந்த போட்டோக்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது. இந்த பாடல் ஷுட்டிங் முடிந்த கையோடு ஷாருக்கான்-அட்லீ படத்தில் நடிக்க நயன்தாரா மும்பை சென்று விட்டாராம். சம்ந்தாவும் தனது முதல் பான் இந்தியன் படமான யசோதா ஷுட்டிங்கிற்காக சென்று விட்டாராம்.

Recommended Video

Vignesh Shivan -கு Propose செய்த Nayanthara | Valentines Day, Arabic Kuthu
 அதையே மிஞ்சிடுமாமே இது

அதையே மிஞ்சிடுமாமே இது

படத்தில் கடைசியாக எடுக்கப்பட்டுள்ள டூ டூ டூ பாடல் மிகப் பெரிய ஹிட் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஊம் சொல்றியா மாமா பாடலுக்கு பிறகு அதே அளவிற்கு அனைவரும் முணுமுணுக்கு மாஸ் ஹிட் பாடலாக இந்த பாடல் இருக்கும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X