வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

சென்னை : கோலிவுட்டின் மிக பிரபலமான காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன். பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக டிவி பேட்டி ஒன்றில் நயன்தாரா கூறி இருந்தார்.

Nayanthara and Vignesh Shivans latest photos goes viral

இதனால் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, தொழிலிலும் ஒன்றாக இணைந்தே செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் பேனரில் பல படங்களை தயாரித்து வருகிறார்கள்.

சோஷியல் மீடியாவில் இருந்தும், மீடியாக்களிடம் இருந்தும் விலகி இருக்க நினைத்தாலும் இந்த ஜோடியின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இவர்களின் ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாமல் அவ்வப்போது முக்கிய நாட்களில் தாங்கள் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் சிலவற்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அவுட்டிங் சென்ற ஃபோட்டோக்களை தற்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். எளிமையான மேக்அப், ஸ்லீவ்லெஸ் உடையில் நயன்தாரா அனைவரையும் கவர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் செம வைரலாக பரவி வருகிறது.

தற்போது நயன்தாரா, அட்லீ பாலிவுட்டில் முதல் முறையாக இயக்கும் லைன் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ராஜா ராணி, பிகில் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் இது. அதோடு அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் இவர் நடித்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். நானும் ரெளடி தான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் இது. இதில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

Recommended Video

Nayanthara கூட நடிக்க ஆசை | Actress Jayashree Exclusive | #Closecall | Filmibeat Tamil

இதைத் தொடர்ந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்க போவதாக அறிவித்துள்ளனர். பிக்பாஸ் கவின் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு ஊர்க்குருவி என பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் தான் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X