பேரம் பேசி பேக் வாங்கிய நயன்தாரா... வைரலாகும் க்யூட் வீடியோ
சென்னை : தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருபவர் நயன்தாரா. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வரும் நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
Recommended Video
தனது காதலரும், டைரக்டருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து பல படங்களை தயாரித்து வருகிறார் நயன்தாரா. அடுத்தடுத்து பல படங்களின் அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் கவின் ஹீரோவாக நடிக்கும் ஊர்க்குருவி படத்தை ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவித்துள்ளனர்.

படங்களில் பிஸியான நயன்தாரா
நயன்தாரா, ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அதோடு விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. இதில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோருடன் நயன்தாரா நடித்துள்ளார்.

பாலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டார்
அதைத் தொடர்ந்து ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் லயன் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார் தென்னிந்திய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. அதோடு பல படங்களிலும் நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டு வருகிறது.

காதலருடன் அவுட்டிங்
படங்களில் பிஸியாக இருந்தாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அடிக்கடி அவுட்டிங் சென்று வருவதும், அந்த ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருவதையும் இருவருமே வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில் அவுட்டிங் போன ஃபோட்டோக்களை நயன்தாரா பகிர்ந்திருந்தார். இந்த ஃபோட்டோக்களை ரசிகர்கள் வைரலாக்கினர்.

பேரம் பேசிய நயன்தாரா
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனியார் ஜெட் விமானத்தில் அடிக்கடி பறந்து வருகிறார்கள். அப்படி கேரளாவில் அவுட்டிங் போகும் போது, சாலையோர வியாபாரி ஒருவரிடம் பையை பேரம் பேசி வாங்கி உள்ளார் நயன்தாரா. மிக எளிமையான டிரஸ்சில், மாஸ்க் அணிந்து சாதாரண பெண் போல் நடந்து செல்லும் நயன்தாராவிடம் அந்த வியாபாரி பையை விற்க வருகிறார்.

பாராட்டும் ரசிகர்கள்
அவரிடம் பேரம் பேசி, சாதாரண பெண்ணை போல் பை வாங்கி உள்ளார். இந்த க்யூட் வீடியோவை நயன்தாராவின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி உள்ளனர். சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில், மிக எளிமையாக சாதாரண பெண்ணை போலவே நயன்தாரா இருந்து வருவதை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











