»   »  அறிவிப்புகள், கொண்டாட்டங்கள்.... இது நயன்தாராவுக்கு விசேஷ பிறந்த நாள்!

அறிவிப்புகள், கொண்டாட்டங்கள்.... இது நயன்தாராவுக்கு விசேஷ பிறந்த நாள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நயன்தாராவுக்கு இந்த ஆண்டு விசேஷமான பிறந்த நாள்.

புதிய பட அறிவிப்புகள், பர்ஸ்ட் லுக் வெளியீடு, படப்பிடிப்பில் கேட் வெட்டல் என அமர்க்களப்பட்டது நேற்று முழுவதும்.

Nayanthara celebrates birthday at Sivakarthikeyan movie set

நேற்று நயன்தாரா பிறந்த நாளில் அவர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும், அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள இரு படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அறம் படத்தின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாராவுக்கு அதன் படப்பிடிப்பில் நேற்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு சிவகார்த்திகேயன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். பின்னர் நயன்தாரா பிறந்த நாள் கேக் வெட்டினார்.

இந்த விழாவில் இயக்குநர் மோகன் ராஜா, ஒளிப்பதிவாளர் ராம்ஜி, பிஆர்ஓ சுரேஷ் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.

Nayanthara celebrates birthday at Sivakarthikeyan movie set

நயன்தாராவின் காதலராகச் செய்திகளில் அடிபடும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் நயன்தாராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

அவருடைய அந்தப் புன்னகையைப் பார்க்கும்போது அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அறிவீர்கள். இந்த நாள் என்னுடைய சிறந்தநாள் என்று ட்வீட் செய்து இருவரும் இணைந்துள்ள ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார்.

English summary
The birthday of actress Nayanthara was celebrated in the sets of 24 AM STUDIOS untitled production number 2 on Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil