சென்னை: நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை தனது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர்கள் ஓணம் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழகத்தில் வாழும் மலையாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் வித்யாசாகர் ராவ், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கசவு சேலை கட்டிக் கொண்டாடியுள்ளார். இருமுகன் படம் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் நயன் ஓணம் பண்டிகையை தனது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.
நயன் கேரளா புடவையில் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து எடுத்துள்ள செல்ஃபி ட்விட்டரில் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து படம் எடுக்க உள்ளார்.
விக்னேஷுக்கு சூர்யா கால்ஷீட் கொடுக்க காரணமே நயன்தாரா என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.