Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 8 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நச்சுன்னு முன்னேறிச் செல்லும் நயன்தாரா.. அதற்குள் 4 முடிஞ்சிருச்சு!

சென்னை: நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்து, சார்ஜுனுந் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐரா திரைப்படம் வரும் 28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. அடுத்ததாக மிஸ்டர் லோக்கல்,கொலையுதிர் காலம் படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால், இந்த வருடம் பாதி முடிவதற்குள்ளேயே நயன்தாராவுக்கு 4 படங்கள் வெளியாகவுள்ளன.
2019 பிறந்து 3 மாதங்கள் ஓடி விட்டன. இந்த வருடம் சினிமா தயாரிப்பாளர்கழும் விநியோகஸ்தர்களும் பேட்ட விஸ்வாசம் படங்களின் மாபெரும் வெற்றியுடன் ஆண்டை தொடங்கியுள்ளனர். விஸ்வாசம் படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நயன்தாரா வின் அடுத்த படமாக ஐரா வெளியாகவுள்ளது . இந்த படத்தில் துணிச்சலான பத்திரிகை நிருபராகவும், பயந்த சுபாவம் கொண்டவராகவும் இரு வேடங்களில் நடித்து மிரட்டியுள்ளார் நயன்தாரா.

கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா, அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா படங்களின் தொடர் வெற்றியால், தனி மார்க்கெட்டை பிடித்துள்ளார். ஐரா படத்தில் ட்ரெய்லர், பாடல்கள் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து மே 1-ம் தேதி நயன்தாரா சிவகார்த்திகேயனுடன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகவுள்ளது. இந்த வருடம் பாதி முடிவதற்குள்ளேயே நயன்தாரா வின் 3 படங்கள் ரிலீஸாகவுள்ளன.

சாக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படமும் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. பொங்கலுக்கு ரிலீசியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்ட விஸ்வாசம் படங்களின் ரிலீசால் தள்ளிப்போனது. படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என தெரியவில்லை.

இந்த படங்களைத் தொடர்ந்து, நயன்தாரா தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி வெளியாகும் பட்சத்தில், இந்த ஆண்டு நயன்தாரா நடித்து 5 படங்கள் ரிலீசாகியிருக்கும். லேடி சூப்பர் என்ற பட்டம் சும்மாவா வந்தது?