»   »  கவர்ச்சிக்கு 'நோ' சொல்லும் நயன்தாரா காரணம் விக்னேஷ் சிவன்?

கவர்ச்சிக்கு 'நோ' சொல்லும் நயன்தாரா காரணம் விக்னேஷ் சிவன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நயன்தாராவின் திடீர் கொள்கையினால் வெங்கடேஷின் 'பாபு பங்காரம்' படப்பிடிப்பு தள்ளிப் போயிருப்பதாக கூறப்படுகிறது.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாரா 'பாபு பங்காரம்' படத்தில் வெங்கடேஷுடன் சேர்ந்து நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

இன்னும் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளை முடித்தால் படத்தைத் திரைக்குக் கொண்டு வந்து விடலாம். ஆனால் நயன்தாராவின் திடீர் கெடுபிடிகளால் படத்தை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nayanthara Denies Glamorous Scenes

பாடல் காட்சியில் அரைகுறை ஆடைகள் அணிந்து நடிக்க மாட்டேன் என்பதுதான் நயன்தாராவின் திடீர் நிபந்தனையாம். இதனால் அந்தப் பாடலை படம் பிடிக்க முடியாமல் படக்குழு திணறி வருகிறது.

மேலும் தான் கொடுத்த தேதிகளை படக்குழு வீணடித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால் இதற்குப் பின்னணியில் இருப்பது இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

மீண்டும் நயன்தாராவுடன் காதலைப் புதுப்பித்த விக்னேஷ் சிவன் அதிக கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டாம் என்று நயன்தாராவுக்கு அறிவுரை கூறியிருக்கிறாராம்.

இதனால் தான் அரைகுறை ஆடை அணிந்து நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா அடம் பிடிப்பதாகக் கூறுகின்றனர்.மேலும் சீனியர் ஹீரோக்களுடன் கவர்ச்சி காட்டி நடிப்பதை நயன்தாராவும் விரும்பவில்லையாம்.

தற்போது 'பாபு பங்காரம்' படக்குழுவினர் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனராம். 'இது நம்ம ஆளு' படத்திற்கும் நயன்தாரா இதுபோல செய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Nayanthara Denies Glamorous Scenes in Venkatesh's Babu Bangaram Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil