»   »  டான்ஸ் மட்டுமல்ல.. எதிரிகளை தூக்கி அடிக்கவும் லைன் கட்டி வரும் நாயகிகள்!

டான்ஸ் மட்டுமல்ல.. எதிரிகளை தூக்கி அடிக்கவும் லைன் கட்டி வரும் நாயகிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா, தன்ஷிகா, தமன்னா, அக்ஷரா கவுடா ஆகிய ஹீரோயின்களை நீங்கள் ஆக்ஷன் காட்சிகளில் பார்த்து அசந்து போகக்கூடும்.

ஹீரோயின் என்றால் ஹீரோவை காதலித்து மரத்தை சுத்தி சுத்தி வந்து டூயட் பாடணும் என்பது பழைய கதை. அப்படிப்பட்ட ஹீரோயினாக நடிக்க தற்போதைய நடிகைகள் விரும்பவில்லை.

எங்களால் காதல் மட்டும் அல்ல ஹீரோக்களை போன்று ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்க முடியும் என்கிறார்கள் இளம் நடிகைகள். ஆக்ஷனிலும் சாதிக்க முடியும் என நயன்தாரா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். இனி வெளியாகும் படங்களில் நீங்கள் பார்க்கப் போகும் ஆக்ஷன் நாயகிகள் இவர்கள் தான்.

நயன்தாரா

நயன்தாரா

விக்ரமுடன் சேர்ந்து நடித்துள்ள இருமுகன் படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக வருகிறாராம். படத்தில் வரும் சண்டை காட்சிகளில் நயன் விக்ரமுக்கு இணையாக அதிரடியாக நடித்துள்ளாராம். அடேங்கப்பா என்ன அடிதடி என்று படக்குழு வியந்துள்ளதாம்.

தன்ஷிகா

தன்ஷிகா

ஏற்கனவே கபாலியில் நடிப்பில் அசத்தியிருக்கும் தன்ஷிகா காத்தாடி படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளாராம். இதற்காக அம்மணி சண்டை பயிற்சி எடுத்து ஆக்ஷன் காட்சிகளில் கலக்கியுள்ளார். எங்கு தவறு நடந்தாலும் தட்டிக் கேட்பாராம்.

அக்ஷரா கவுடா

அக்ஷரா கவுடா

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் போகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் அக்ஷரா கவுடா. அக்ஷரா கவுடாவா, நீங்கள் யோசிப்பது சரியே. விஜய்யின் துப்பாக்கி, அஜீத்தின் ஆரம்பம் படங்களில் நடித்தவரே தான்.

தமன்னா

தமன்னா

உலக அளவில் வசூல் வேட்டை நடத்திய பாகுபலி படத்தில் டூயட் பாடியதுடன் சண்டை காட்சிகளிலும் நடித்திருந்தார் தமன்னா. இந்நிலையில் அவர் பாகுபலி படத்தின் 2ம் பாகத்தில் கூடுதல் ஆக்ஷன் காட்டி நடிக்கிறாராம்.

English summary
Nayanthara, Tamanna, Dhansika, Akshara Gowda have taken avatar as action heroines in their forthcoming films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil