»   »  திருநாள்... நயன்தாரா ராசி கை கொடுத்ததா ஜீவாவுக்கு?

திருநாள்... நயன்தாரா ராசி கை கொடுத்ததா ஜீவாவுக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 ஆண்டுகளாக வெற்றி நாயகியாக வலம் வந்த நயன்தாராவின் ராசி திருநாள் படத்துக்குக் கைகொடுத்ததா? இதோ ஒரு பார்வை...

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் நயன்தாரா வெற்றி நாயகியாக வலம் வந்தார். இந்த 3 ஆண்டுகளில் அவர் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 10 படங்களில் நடித்தார்.

அந்த 10ல் 8 படங்கள் ஹிட் மற்ற 2 படங்கள் 'ஓடிவிட்டன'.

ஜீவா

ஜீவா

கோலிவுட்டில் தொடர்ந்து பிளாப் கொடுத்து வந்த ஜீவா வெற்றி தாரகையான நயன்தாராவுடன் சேர்ந்து திருநாள் படத்தில் நடித்தார். நயன்தாராவின் ராசி, ஜீவாவுக்குக் கை கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

திருநாள்

திருநாள்

திருநாள் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தை பார்த்தவர்கள் நயன்தாரா அசத்திவிட்டார் என்றார்கள். ஜீவாவும் சிறப்பாகவே நடித்திருந்தார். இடைவேளை வரை சிறப்பாக அமைந்த படம், இடைவேளைக்குப் பிறகு எதிர்ப்பார்த்த மாதிரி இல்லை என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். எப்படியும் முதலுக்கு மோசமில்லை எனும் அளவுக்கு படம் தப்பித்துவிடும் என்பது சினிமாவுலக கணக்கு.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா இதில் பாவாடை தாவணி அணிந்து இன்னும் சின்னப் பெண்ணாகவே சிக்கென்று வலம் வந்தார். படம் எப்படி இருந்தாலும்அவருக்கு இந்தப் படத்தால் மேலும் மவுசு ஏறியுள்ளது.

செல்வி

செல்வி

திருநாள் படத்துக்கு முதல் மூன்று நாட்கள் சிறப்பான துவக்கம் அமைந்தது. வார நாட்களில்தான் கொஞ்சம் டல். வெங்கடேஷுடன் சேர்ந்து நடித்த பாபு பங்காரம் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார் நயன்தாரா. பாபு பங்காரம் வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. தெலுங்கு படமான பாபு பங்காரம் தமிழில் டப் செய்யப்பட்டு செல்வி என்ற பெயரில் வெளியாகிறது.

English summary
Nayanthara has got her first flop in three years, thanks to Thirunaal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil