»   »  விசுவாசம் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா?

விசுவாசம் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஸ்வாசம் படத்திள் நடிக்க நயன்தாராவிற்கு 5 கோடி சம்பளமா ?

சென்னை: விசுவாசம் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. முன்னணி நடிகை மட்டும் அல்ல அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் அவர் தான். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் அஜீத்தின் விசுவாசம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களில் சேர்ந்து நடித்த அஜீத்தும், நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளது இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

சம்பளம்

சம்பளம்

விசுவாசம் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ. 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவியுள்ளது. இதை இயக்குனர் சிவா தான் உறுதி செய்ய வேண்டும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

சிவா இயக்கத்தில் அஜீத், நயன்தாரா மீண்டும் ஜோடி சேரும் இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். இது குறித்து சமூக வலைதளங்களிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தல

தல

சிவா வேறு ஒரு நடிகரிடம் சென்று கதை சொல்லும்போது ஹிட் இயக்குனராக செல்ல வேண்டும் என்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளார் அஜீத். அதனால் இந்த படம் ஹிட்டாகி அஜீத் அடுத்ததாக வேறு இயக்குனரின் படத்தில் நடிக்க வேண்டும் சாமி என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

English summary
Buzz is that Nayanthara is getting Rs. 5 crore to act in Ajith starrer Viswasam to be directed by Siva. Ajith and Nayanthara are sharing screen space for the fourth time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil