சமந்தாவுக்கு கிஃப்ட் கொடுத்து அசத்திய நயன்தாரா... எதுக்குன்னு தெரியுமா?

சென்னை : நடிகை சமந்தாவிற்கு நன்றி சொன்னதுடன், அழகான பரிசு ஒன்றை கொடுத்துள்ளார் நயன்தாரா. இதை பார்த்து விட்டு, இவர்களுக்குள் இப்படி ஒரு ஃபிரண்ட்ஷிப்பா என பலரும் ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.

நயன்தாரா, சமந்தா இருவருமே தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களாக இருப்பவர்கள். இந்திய சினிமாவிலும் தங்கள் புகழை பரப்பி உள்ளனர். இருவருமே தென்னிந்திய சினிமாவை சேர்ந்த டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்த்து நடித்து, கோடிக்கணக்கில் ரசிகர்களை வைத்துள்ளனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

இவர்கள் இருவரும் இணைந்து டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்துவாக்கல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோக்களை இவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதுக்கு தான் கிஃப்டா

இதுக்கு தான் கிஃப்டா

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்ததை முன்னிட்டு தான் நயன்தாரா, சமந்தாவிற்கு கிஃப்ட் கொடுத்து அசத்தி உள்ளார். கிஃப்ட் மட்டுமல்ல அதோடு, டியர் கதிஜா வித் லவ் கண்மணி என எழுதிய வாழ்த்து அட்டையையும் கொடுத்துள்ளார். காத்துவாக்கல ரெண்டு காதல் படத்தில் கதிஜா என்ற கேரக்டரில் சமந்தாவும், கண்மணி என்ற கேரக்டரில் நயன்தாராவும் நடிக்கிறார்கள் என்பது உறுதியாக உள்ளது.

நன்றி சொன்ன சமந்தா

நன்றி சொன்ன சமந்தா

தங்களின் நிஜப் பெயர்களை குறிப்பிடாமல், படத்தில் நடித்த கேரக்டர்களின் பெயரை குறிப்பிட்டு நயன்தாரா அளித்த வாழ்த்து அட்டையையும், கம்மலையும் அப்படியே போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சமந்தா. இந்த அழகான கிஃப்டிற்காக நயன்தாராவுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

உதயநிதி வெளியிடும் படம்

உதயநிதி வெளியிடும் படம்

முக்கோண ரொமான்டிக் காமெடி படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும், செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தை வெளியிடும் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் வாங்கி உள்ளது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்த படம் தியேட்டர்களில் மட்டுமே ரிலீசாகும். ஏப்ரல் 28 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக விக்னேஷ் சிவன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ராம்போ என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X