»   »  அப்படி இருந்த நயன்தாராவா இப்படி ஆயிட்டாங்க?: நம்ப முடியலையே!

அப்படி இருந்த நயன்தாராவா இப்படி ஆயிட்டாங்க?: நம்ப முடியலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்பெல்லாம் தான் உண்டு தனது வேலை உண்டு என்று படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருந்த நயன்தாரா தற்போது ஜோக்கடித்து கலகலவென இருக்கிறாராம்.

விக்ரமுடன் ஜோடி சேர்ந்து நடித்த இருமுகன் படம் வெற்றியடையந்த குஷியில் உள்ளார் நயன்தாரா. அடுத்து கார்த்தியுடன் நடித்த காஷ்மோரா வெளியாக உள்ளது. இது தவிர அவர் டோரா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

Nayanthara has changed

முன்பெல்லாம் நயன்தாரா படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருப்பார். ஆனால் தற்போதோ படப்பிடிப்பு தளத்தில் நயன் இருக்கும் இடத்தில் ஒரே கலகலப்பாக உள்ளது.

என்னவென்று பார்த்தால் நயன்தாரா தான் ஜோக்கடித்து சக நடிகர்களுடன் கலகலப்பாக பேசி சிரிக்கிறார், சிரிக்க வைக்கிறார். அமைதியாக இருந்து வந்த நயன்தாராவின் இந்த திடீர் மாற்றம் படக்குழுவினரை வியக்க வைத்துள்ளது.

அம்மணி இந்த அளவுக்கு மாறியதற்கு யார் காரணமோ தெரியவில்லையே என்கிறார்கள் படக்குழுவினர்.

English summary
Nayanthara who used to be moody in the shootingspot is cracking jokes and making the unit laugh louder.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil