»   »  நயன்தாரா மனதில் என்ன உள்ளது?: இயக்குனர் சித்திக் பதில்

நயன்தாரா மனதில் என்ன உள்ளது?: இயக்குனர் சித்திக் பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நயன்தாரா மனதில் சினிமாவைத் தவிர வேது எதுவும் இல்லை என்று இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா கோலிவுட் இயக்குனர்கள் மட்டும் அல்ல இளம் ஹீரோக்களின் மனம் கவர்ந்தவர். அதனால் தான் அவர் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். கோடிகளில் சம்பளம் வாங்கும் அவர் லட்சங்களில் சம்பளத்தை பெற்று இயக்குனர் சித்திக்கின் மலையாள படமான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஹீரோ மம்மூட்டி.

இந்நிலையில் நயன்தாரா பற்றி சித்திக் கூறுகையில்,

சினிமா

சினிமா

நயன்தாராவின் மனதில் சினிமாவைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை.

அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு

நயன்தாரா அர்ப்பணிப்புடன் வேலை செய்து வருகிறார். அது அவர் படப்பிடிப்பு தளத்தில் நடந்து கொள்வதில் இருந்தே தெரியும்.

ரெடி

ரெடி

ஹீரோயின் என்று பந்தா செய்ய மாட்டார். காலை 9 மணிக்கு காட்சி படமாக்கப்படுகிறது என்றால் 8.55 மணிக்கே தயாராக நிற்பார் நயன்தாரா.

உடை மாற்றும் நேரம்

உடை மாற்றும் நேரம்

பல நடிகைகளுக்கு உடைமாற்ற தான் அதிக நேரம் ஆகும். ஆனால் நயன்தாராவோ கண் இமைக்கும் நேரத்தில் உடைமாற்றிவிட்டு வந்துவிடுவார். தன்னால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் நயன்தாரா.

கேரவன்

கேரவன்

தன்னுடைய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்தாலும் அவர் கேரவனுக்குள் செல்லாமல் படப்பிடிப்பு தளத்திலேயே இருந்து ஷூட்டிங்கை பார்த்துக் கொண்டிருப்பார் என்று சித்திக் தெரிவித்துள்ளார்.

English summary
Director Siddique told that Nayanthara has only cinema on her mind.

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil