»   »  ஹாட்ரிக் வெற்றிகள்... தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக மாறிய நயன்தாரா

ஹாட்ரிக் வெற்றிகள்... தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக மாறிய நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தடுத்து தொடர் வெற்றிகளின் மூலம் பாக்ஸ் ஆபிசை முழுவதுமாக தனது வசப்படுத்தியிருக்கிறார் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா.

இவரின் நடிப்பில் இந்த வருடம் நண்பேன்டா, மாசு என்கிற மாசிலாமணி, தனி ஒருவன்,மாயா மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய 5 படங்கள் வெளியாகி இருக்கின்றன.

இதில் தனி ஒருவன், மாயா மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய 3 படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்று ஹாட்ரிக் நாயகி என்ற அந்தஸ்தை நயனுக்கு பரிசளித்திருக்கிறது.

நயன்தாரா

நயன்தாரா

ராஜா ராணி மூலம் தமிழ் சினிமாவில் தனது 2 வது இன்னிங்க்சை ஆரம்பித்த நயனுக்கு வெள்ளித்திரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. தொடர்ந்து ஆரம்பம், இது கதிர்வேலன் காதல்,நீ எங்கே என் அன்பே, நண்பேன்டா, மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்களில் நாயகியாக நடித்தார். இதில் இது கதிர்வேலன் காதல் நண்பேன்டா மற்றும் மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்கள் இவருக்கு தோல்விப் படங்களாக அமைந்தன.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

தொடர் தோல்விகளால் சோர்ந்து போயிருந்த நயன் தற்போது ஹாட்ரிக் வெற்றிகளின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறார். ஜெயம் ரவியுடன் நடித்த தனி ஒருவன், சோலோ ஹீரோயினாக நடித்த மாயா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த நானும் ரவுடிதான் ஆகிய 3 படங்களும் அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக மாறியிருக்கின்றன.

தனி ஒருவன்

தனி ஒருவன்

இந்தத் தொடர் வெற்றிகளின் மூலம் பாக்ஸ் ஆபிசிலும் தனது ஆதிக்கத்தை அதிகரித்து இருக்கிறார் நயன்தாரா. ஜெயம் ரவியுடன் நயன்தாரா இணைந்து நடித்த தனி ஒருவன் திரைப்படம் வெளிவந்து 9 வாரங்கள் கடந்த நிலையிலும் இன்னும் ஒரு சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் இதுவரை 6.63 கோடிகளை வசூலித்திருக்கும் இப்படம் உலகம் முழுவதும் 75 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது.

மாயா

மாயா

நயன்தாரா - ஆரி நடிப்பில் வெளியான மாயா திரைப்படம் வெற்றிகரமாக 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. சென்னையில் 3.39 கொடிகளை வசூலித்த இப்படம் உலகம் முழுவதும் சுமார் 40 கோடிகளைக் குவித்திருக்கிறது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் நயன்தாராவின் மதிப்பை மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டியது.

நானும் ரவுடிதான்

நானும் ரவுடிதான்

கதை பிடித்திருந்தால் சிறிய ஹீரோ என்பதையெல்லாம் பார்க்க மாட்டார் என்னும் கூற்றை மாயா படத்தில் நிரூபித்த நயன்தாரா,விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை அதனை நிரூபணம் செய்தார். இந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்த காதம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வெளியாகி 5 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை சென்னையில் 1.44 கோடிகளை வசூலித்திருக்கிறது, மேலும் உலகமெங்கும் நல்லதொரு வரவேற்பைப் படம் பெற்றிருக்கிறது.

கைநிறைய படங்கள்

கைநிறைய படங்கள்

இந்த ஆண்டில் நயன்தாரா நடிப்பில் இதுவரை 5 படங்கள் வந்திருக்கின்றன. வாய்ப்புகள் சரியாக அமைந்தால் இது நம்ம ஆளு மற்றும் திருநாள் ஆகிய படங்களும் இந்த ஆண்டே வெளியாகலாம். இந்த 2 படங்களும் வெளிவரும் பட்சத்தில் 2015ல் அதிகப் படங்களில் நடித்த நடிகை என்ற பெருமை நயனுக்குக் கிடைக்கும். இது தவிர கார்த்தியுடன் காஷ்மோரா மற்றும் மேலும் சில படங்களும் நயன்தாராவின் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தன்னம்பிக்கை + பலம்

தன்னம்பிக்கை + பலம்

எவ்வளவு விமர்சனங்கள், கிசுகிசுக்கள் வந்த போதிலும் கூட நயன்தாராவின் மதிப்பு சற்றும் குறைந்தபாடில்லை, மாறாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சொந்த வாழ்வில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் நடிப்பு என்று வந்துவிட்டால் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுவது நயனின் சிறப்புகளில் ஒன்று. இந்த தன்னம்பிக்கைதான் மகிமா, மாயா, காதம்பரி என்று ஒவ்வொரு பாத்திரத்திலும் பிரதிபலித்து வெற்றியை அவருக்குப் பரிசளிக்கிறது போலும்.

தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார்

தற்போது ரசிகர்கள் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நயன்தாராவுக்கு வழங்கியிருக்கின்றனர். மேலும் அவரின் திறமை, உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவைதான் இந்த வெற்றிகளுக்கு காரணம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிகளால் மகிழ்ந்து போன நயன்தாரா இந்த வெற்றிகள் கிடைக்கக் காரணமாக இருந்த ரசிகர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் மனமார நன்றி தெரிவித்திருக்கிறார்.

English summary
Nayanthara Got Hat -Trick Hits. She says in Twitter "And Now say "Golden Hat-Trick" 3 HITS in a row🙏 Thanioruvan & den Maya & nw NanumRowdyDhaan.#SuperFans made it al #HattrickHitForNayanthara".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil