»   »  நயனதாரா இனி 'கோடீஸ்வரி'

நயனதாரா இனி 'கோடீஸ்வரி'

Subscribe to Oneindia Tamil
Nayanatara

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் நயனதாரா. சமீபத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க அவருக்கு ரூ. 1.05 கோடி சம்பளம் பேசப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளதாம்.

இந்திய சினிமாவில், கோடியைத் தாண்டிய நடிகர்கள் அதிகம். ஆனால் நடிகைகளின் பட்டியல் மிக மிக மிக சிறியது. அதிலும் தென்னிந்தியாவில் திரிஷாதான் முதன் முதலில் கோடியைத் தொட்டவர். அவருக்குப் பின் அதை எட்டியுள்ளார் நயனதாரா.

இதன் மூலம் இந்திய அளவில் ஐந்தாவது கோடீஸ்வரி என்ற பெருமையும், தென்னிந்திய திரையுலகில் கோடி சம்பளத்தைத் தொட்ட 2வது நாயகி என்ற பெருமையும் நயனதாராவுக்குக் கிடைத்துள்ளது.

பில்லா படத்தில் நடிக்க நயனதாரா பெற்ற சம்பளம் ரூ. 70 லட்சமாகும். சில நாட்களுக்கு முன்பு புதிய தமிழ்ப் படம் ஒன்றில் புக் ஆன நயனதாராவுக்கு ரூ. 75 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த வாரம் தெலுங்குப் படத் தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ், நயனதாராவை தனது புதிய படத்திற்காக ரூ. 1.05 சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்த பெல்லம் கொண்டா சுரேஷ் தெலுங்கில் வெளியான சிவாஜி படத்தின் விநியோகஸ்தர் ஆவார்.

முதல் முறையாக கோடி சம்பளம் வாங்கப் போகும் படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட கையோடு ஹாங்காங் பறந்து விட்டார் நயனதாரா.

இப்படத்தில் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த குணசேகர் படத்தை இயக்கப் போகிறார். ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்கிறார். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வருகிறதாம். அதற்குள் நயனதாராவும் தனது ஹாங்காங் விசிட்டை முடித்து விட்டுத் திரும்பி விடுவாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil