»   »  இனி இவர் "4 கோடி நயன்தாரா"வாமே... தயாரிப்பாளர்கள் "தட் அடங்கொக்க மக்கா மொமன்ட்"!

இனி இவர் "4 கோடி நயன்தாரா"வாமே... தயாரிப்பாளர்கள் "தட் அடங்கொக்க மக்கா மொமன்ட்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நயன்தாரா அதிரடியாக தனது சம்பளத்தை நான்கு கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து 10 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தமிழ்ப் படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்து விட்டதால் வெற்றிப்பட நாயகியாக அவர் வலம் வருகிறார்.

காதல் சர்ச்சை...

காதல் சர்ச்சை...

அடுத்தடுத்து காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும், அவரது பட வாய்ப்புகளை அது பாதிக்கவில்லை. சினிமாவில் அறிமுகமான புதிதில் அவரது சம்பளம் 40 மற்றும் 50 லட்சங்களாகவே இருந்தது.

படிப்படியாக உயர்ந்த சம்பளம்...

படிப்படியாக உயர்ந்த சம்பளம்...

ஆனால் தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்ததால், படிப்படியாக அவரது சம்பளமும் உயரத் தொடங்கியது. விரைவிலேயே அது நாயகர்களுக்கு இணையாக ஒரு கோடியானது.

வெற்றிப் படங்கள்...

வெற்றிப் படங்கள்...

தமிழில் மாயா, நானும் ரவுடி தான், தனி ஒருவன், இது நம்ம ஆளு பட வெற்றிகளைத் தொடர்ந்து, நயன் புதிய படங்களுக்கு ரூ. 3 கோடி சம்பளம் கேட்பதாகக் கூறப்பட்டது. விரைவில் அவர் விக்ரமுடன் நடிக்கும் இருமுகன், கார்த்தியுடன் நடிக்கும் காஷ்மோரா, ஜீவாவுடன் நடிக்கும் திருநாள் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன.

ரூ. 4 கோடி...

ரூ. 4 கோடி...

இந்நிலையில் தற்போது நயன் தன் சம்பளத்தை மேலும் உயர்த்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய படங்களுக்காக தன்னை அணுகும் தயாரிப்பாளர்களிடம் அவர் நான்கு கோடி ரூபாய் கேட்கிறாராம்.

தயாரிப்பாளர்கள் ஷாக்...

தயாரிப்பாளர்கள் ஷாக்...

இப்படித்தான் முன்னணி நாயகனுடன் நடிக்க கால்ஷீட் கேட்டுப் போன தயாரிப்பாளர் நயனின் புதிய சம்பளத்தைக் கேட்டு அப்படியே ஷாக்காகி திரும்பி விட்டாராம். வெற்றிப்பட நாயகியாக வலம் வருவதால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என தன் சம்பளத்தை நயன் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய சம்பளத்தின் மூலம் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகி இருக்கிறார் நயன்

English summary
According to industry sources, Nayanthara has hiked her remuneration by 50 per cent and currently quotes Rs4 crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil