»   »  நயன் சேச்சி என்டே ரோல் மோடல்: மஞ்சிமா மோகன்

நயன் சேச்சி என்டே ரோல் மோடல்: மஞ்சிமா மோகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா தனது ரோல் மாடல் என நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து கோலிவுட் வந்துள்ள மேலும் ஒரு நடிகை மஞ்சிமா மோகன். ஆனால் அவரை பத்தோடு பதினோறாவது நடிகையாக எடுத்துக் கொள்ள முடியாது.

முதல் படமான அச்சம் என்பது மடமையடாவிலேயே நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

பேச்சு

பேச்சு

கோலிவுட்டுக்கு புதுசு என்றாலும் யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பது மஞ்சிமாவுக்கு நன்றாக தெரிந்துள்ளது. குறிப்பாக மீடியாக்களிடம் தெளிவாக அளந்து பேசுகிறார்.

நயன்தாரா

நயன்தாரா

கேரளாவில் இருந்து வந்து கோலிவுட்டின் மகாராணியாக வலம் வரும் நயன்தாரா தான் மஞ்சிமா மோகனின் ரோல் மாடலாம். தனது தோழி கீர்த்தி சுரேஷ் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார் மஞ்சிமா.

கமர்ஷியல் படம்

கமர்ஷியல் படம்

நான் நல்ல கருத்துள்ள படங்களுடன் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். இந்த நடிகையின் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டாகும் என்ற பெயிரை எடுக்க விரும்புகிறேன் என மஞ்சிமா கூறியுள்ளார்.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சிமா நிவின் பாலியின் ஒரு வடக்கன் செல்ஃபி படம் மூலம் ஹீரோயின் ஆனார். அந்த படம் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Manjima Mohan said that Nayanthara is her role model. Gautham Menon has introduced Manjima in Kollywood through his movie AYM.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil