நயன்தாரா.. நயன்தாரா தான்.. அவங்கள மாதிரி ஒரு உழைப்பாளியை நான் பார்த்ததே இல்லை.. சமந்தா செம பதில்!

சென்னை: காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீஸ் மற்றும் தனது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது ரசிகர்களுடன் #AskSam என்ற கேள்வி பதில் நேரத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார் நடிகை சமந்தா.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கண்மணி கங்குலி கதாபாத்திரத்தை விட கதீஜா கதாபாத்திரம் தான் சூப்பர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், அது தொடர்பான கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு சமந்தா அளித்துள்ள பதில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஈகோ இல்லாத மனசு

ஈகோ இல்லாத மனசு

நயன்தாராவுடன் அதுவும் அவரது காதலர் இயக்கும் படத்தில் இணைந்து நடித்தால் எங்கே நம்மை டம்மி செய்து விடுவார்களோ என்கிற எந்தவொரு ஈகோவும் இல்லாமல், ஜாலியா ஒரு படம் பண்ணலாமே என நினைத்து தான் இந்த படத்தில் நடித்துள்ளார் நடிகை சமந்தா. ஏற்கனவே தெறி படத்தில் எமி ஜாக்சன் உடனும், மெர்சல் படத்தில் காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் உடனும் நடித்துள்ளார். மேலும், பல படங்களில் இன்னொரு லீடு ஹீரோயின் உடன் இணைந்து நடித்து அசத்தி உள்ளார்.

பாராட்டும் வாழ்த்துக்களும்

பாராட்டும் வாழ்த்துக்களும்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜா கதாபாத்திரத்தில் அழகாகவும் அசத்தலாகவும் நடித்துள்ள சமந்தாவுக்கு பாராட்டுக்கள் ஒரு பக்கம் குவிந்து வருகிறது. மறுபக்கம் 35வது பிறந்தநாளை கொண்டாடிய சமந்தாவுக்கு வாழ்த்துக்களும் நேற்று குவிந்தன. இந்நிலையில், இரண்டுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தற்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

லவ் மற்றும் ஹேட் எப்படி பார்குறீங்க

லவ் மற்றும் ஹேட் எப்படி பார்குறீங்க

முடிந்த வரை அன்பு மற்றும் வெறுப்பை அதிகளவில் வாங்கிக் கொள்ளக் கூடாது என்பதில் கவனத்துடன் இருக்கிறேன். அதில் இருந்து சற்று விலகி இருந்தாலே நாம் நினைத்ததை செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நச்சென பதில் அளித்துள்ளார்.

பெஸ்ட் பர்த்டே கிஃப்ட்

பெஸ்ட் பர்த்டே கிஃப்ட்

கதீஜா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் தியேட்டரில் செலுத்திய அன்பு தான் எனக்கு கிடைத்த சிறந்த பிறந்தநாள் பரிசாக கருதுகிறேன் என ஹாஷ்டேக் கதீஜாவை டிரெண்ட் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.

நயன்தாரா நயன்தாரா தான்

நயன்தாரா நயன்தாரா தான்

நயன் தாரா பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்கள் என்கிற கேள்விக்கு பதில் அளித்த நடிகை சமந்தா, நயன்தாரா நயன்தாரா தான்.. அவரை போல வேறு யாரும் இருக்க முடியாது. அவங்க ரொம்ப உண்மையாகவும், நம்பிக்கைக்குரியவராகவும், தைரியசாலியாகவும், நான் பார்த்ததிலேயே ரொம்ப ஹார்ட்வொர்க் பண்ற ஒரு மனுஷியாகவும் பார்க்கிறேன் என டபுள் ஹார்ட் போட்டு நயன்தாரா பற்றிய தனது கருத்துக்களை கூறி ரசிகர்களை உற்சாகமாக்கி உள்ளார் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X