»   »  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா… இதெல்லாம் எங்க போய் முடியுமோ?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா… இதெல்லாம் எங்க போய் முடியுமோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எப்படியாவது நயன்தாரா கால்ஷீட்டை வாங்கிவிட வேண்டும் என்று விஜய், அஜித்துக்கு நிகராக சுற்றுகிறார்கள் நாளைய இயக்குநர்கள். அப்படி கஷ்டப்பட்டு கால்ஷீட் வாங்கி படம் எடுக்கும்போதும் நயனுக்கு ராஜ உபசாரம்தான். இத்தனைக்கும் எந்த புரமோஷனுக்கும் தலைகாட்டாதவர் நயன்.

Nayanthara is new Lady Superstar?

நயன் தலைகாட்டாத வரைக்கும் நமக்கு நல்லது தான் என்று நயனை கூலாகவே வைத்திருக்கும் வேலையில் இறங்குகிறார்கள் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும். இதில் அடுத்து சேரவிருப்பது லேடி சூப்பர் ஸ்டார் பட்டம். தமிழ் சினிமாவில் விஜயசாந்திக்குதான் அந்த பெருமை கிடைத்தது லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் தரப்பட்டது. அதன் பிறகு இப்போது நயனுக்கு.

நயன்தாரா நடித்துக்கொண்டிருக்கும் சில படங்களில் டைட்டில் கார்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போடும் வேலைகள் நடக்கின்றன. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ...?

English summary
Young directors now rechristened Nayanthara as new lady superstar of Tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil