»   »  மெதுவா பேசினாவே நயன்தாராவுக்கு நல்லா கேட்குமாம்

மெதுவா பேசினாவே நயன்தாராவுக்கு நல்லா கேட்குமாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா காது கேட்காதவராக நடிக்கிறார் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த மாதம் 3ம் தேதி படப்பிடிப்பு துவங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடந்து அண்மையில் தான் முடிந்தது. படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இசையமைக்கும் பொறுப்பை அனிருத் ஏற்றுள்ளார்.

இந்நிலையில் படத்தில் நயன்தாராவுக்கு காது கேட்காது என்று செய்திகள் வெளியாகின.  ஆனால் அந்த செய்தியில் உண்மை இல்லை என்று விக்னேஷ் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக விஜய் சேதுபதி தாடி, மீசையை எடுத்துள்ளார்.

நானும் ரவுடி தான் ஜூன் மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

English summary
Naanum Rowdy Dhaan director rubbished the news that Nayanthara is acting as a hearing impaired woman.
Please Wait while comments are loading...