»   »  சிரஞ்சீவி படத்தில் நயன், சம்பளம் ரூ.3 சி, பிகினிக்கு ரூ.1 சி: எல்லாம் கப்சாவாம்ய்யா!

சிரஞ்சீவி படத்தில் நயன், சம்பளம் ரூ.3 சி, பிகினிக்கு ரூ.1 சி: எல்லாம் கப்சாவாம்ய்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிரஞ்சீவியின் 150வது படத்தில் தான் நடிக்கவில்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி அரசியல் பக்கம் போனாலும் போனார் அவரது ரசிகர்கள் அவரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்கள். இந்நிலையில் தான் அவர் தனது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளார்.

அவர் மீண்டும் ஹீரோவாகும் படம் அவருக்கு 150வது படம் ஆகும்.

நயன்தாரா

நயன்தாரா

சிரஞ்சீவியின் 150வது படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. அது மட்டும் இல்லை படத்தில் நடிக்க ரூ.3 கோடி, பிகினி காட்சிக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசியுள்ளார் நயன் என்று கூறப்பட்டது.

இல்லை

இல்லை

சிரஞ்சீவியின் 150வது படத்தில் தான் ஹீரோயினாக நடிப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று நயன்தாரா தற்போது தெரிவித்துள்ளார். சிருவுடன் நடிக்க நயன் மறுத்ததாக கூறப்பட்டதும் உண்மை இல்லையாம்.

பட வாய்ப்பா?

பட வாய்ப்பா?

நான் சிரஞ்சீவியுடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவரது படத்தில் நடிக்க கேட்டு என்னை யாரும் அணுகவில்லை. மக்கள் அவர்களாகவே அவர்களுக்கு தோன்றியது போன்று பேசுகிறார்கள் என்கிறார் நயன்தாரா.

வெங்கடேஷ்

வெங்கடேஷ்

நான் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளேன். நான் கதையை தேர்வு செய்வதில் மிகவும் கவனம் செலுத்துகிறேன். ஒவ்வொரு படத்தையும் எனது முதல் படமாக கருதுகிறேன். மக்கள் என் படங்களை பாராட்டுகையில் மேலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று உற்சாகம் பிறக்கிறது என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

English summary
Nayanthara said that she is not part of Chiranjeevi's 150th film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil