ராதாரவியுடன் சேர்த்து விஷாலுக்கும் செம டோஸ் விட்ட வரலட்சுமி
Recommended Video

சென்னை: நயன்தாராவை அசிங்கப்படுத்திய நடிகர் ராதாரவியை வரலட்சுமி சரத்குமார் விளாசியுள்ளார்.
கொலையுதிர்காலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசினார். அவர் சீதாவாக நடித்ததை மிகவும் மோசமாக விமர்சித்தார்.
இதை பார்த்த நடிகை வரலட்சுமி சரத்குமார் பொங்கி எழுந்து ட்வீட் செய்துள்ளார்.
ஜோக்ஸ்
பெண்களை அவமதிப்பது, கேவலப்படுத்தி ஜோக்ஸ் சொல்வது, பெண்களை அழகுப் பொருளாக பார்ப்பது எல்லாம் திரையுலகில் சகஜமாக உள்ளது. இது தவறு என்று சொல்லாமல் அமைதியாக இருந்த முந்தைய தலைமுறை நடிகர்கள், நடிகர்களால் தான் இப்படியாகிவிட்டது. இது தான் எங்கள் நிலை.
சின்மயி
உங்களுக்கு நடந்தால் தான் நாங்கள் எதற்காக போராடினோம் என்பதை உணர்வீர்கள்...மீ டூவின்போது எனக்கோ, சின்மயிக்கோ, பல பெண்களுக்கோ திரையுலக பெண்கள் ஆதரவு அளித்திருந்தால் மாற்றம் ஏற்பட்டிருக்கும்... அமைதியாக இருப்பது பலனில்லை.
ஆணாதிக்கவாதிகள்
ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படும் சினிமா சங்கங்கள் இது குறித்து எதுவும் செய்யாது. ஆனால் பெண்களை ஆதரிப்பது போன்று நடிக்கும். உண்மையில் படத்திலோ, நிஜத்திலோ பெண்கள் அசிங்கப்படுதவற்கான சூழல் ஏற்பட காரணமாக உள்ளார்கள் அவர்கள். (விஷாலுக்கும் சேர்த்து டோஸ் விட்டுள்ளார் வரலட்சுமி.)
அவமதிப்பு
ராதாரவி பேசியதை கேட்டு பலர் கைதட்டி பாராட்டி சிரித்தார்கள். சிலரோ கொலையுதிர்காலம் விழாவில் ராதாரவியின் நகைச்சுவை பேச்சு என்றார்கள். அதை தான் இப்படி விளாசியுள்ளார் வரலட்சுமி.


Click it and Unblock the Notifications











