»   »  லேடி சூப்பர்ஸ்டார் தான் 'இந்தியன் 2' ஹீரோயினா... கசியும் தகவல்கள்!

லேடி சூப்பர்ஸ்டார் தான் 'இந்தியன் 2' ஹீரோயினா... கசியும் தகவல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
முதல்ல விஸ்வரூபம் 2... கட்சி ஆரம்பிச்ச பிறகு சபாஷ் நாயுடு, இந்தியன் 2! - இது கமல் முடிவு

சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' திரைப்படம் தயாராகவிருக்கிறது.

ரஜினி நடிப்பில் '2.ஓ' படத்தை தற்போது இயக்கி ரிலீஸுக்காக காத்திருக்கும் இயக்குநர் ஷங்கர் இப்படத்தை இயக்க ரெடியாகி வருகிறார்.

'இந்தியன் 2' படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷங்கர் இயக்கம்

ஷங்கர் இயக்கம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியாகயிருக்கும் '2.ஓ' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்தபடியாக அவர் கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்தை இயக்குகிறார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தியன் 2 அறிவிப்பு

இந்தியன் 2 அறிவிப்பு

இந்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடும் விதமாக தைவானில் 'இந்தியன் 2' என எழுதப்பட்ட சிறிய பலூன் ஒன்றை பறக்கவிட்டார் ஷங்கர். இந்தியன்-2 படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறது. கமல் இதுவரை நடித்த படங்களில் இதுதான் அதிக பட்ஜெட்டாக இருக்கும் என்கிறார்கள்.

நயன்தாரா ஹீரோயின்?

நயன்தாரா ஹீரோயின்?

இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒருவேளை நயன்தாரா சம்மதித்தால், கமலுடன் முதன் முறையாக அவர் இணையும் படம் 'இந்தியன் 2'-வாக இருக்கும். இப்படத்தில் நயன்தாராவுக்கு ஒரு புரட்சி பெண் வேடம் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

வடிவேலு

வடிவேலு

அவர் மட்டுமின்றி, வடிவேலுவும் 'இந்தியன் 2'வில் ஒரு கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. 'இந்தியன்' படத்தில் கவுண்டமணி நடித்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் 'இந்தியன் 2' பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

English summary
The second part of Kamalhaasans 'Indian' movie, 'Indian 2', will be started soon. Nayanthara may acts as heroine role in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil