»   »  நயன்தாரா கிராமத்துப் பெண்ணாக நடிக்கும் திருநாள்!

நயன்தாரா கிராமத்துப் பெண்ணாக நடிக்கும் திருநாள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருநாள் படத்தில் கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

‘ஈ' படத்திற்கு பின் இந்தப் படத்தில்தான் ஜீவா, நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.


Nayanthara to play folk girl in Thirunaal

கும்பகோணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக ஜீவா நடித்து வரும் இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கி வருகிறார்.


நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை நயன்தாரா, இப்படத்திலேயே கிராமத்து பெண்ணாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. காமெடியுடன் காதலும், ஆக்ஷனும் கலந்த இப்படத்திற்காக கும்பகோணத்தில் மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் தினமும் ஆயிரம் துணைநடிகர்கள் நடிக்க, படத்தின் முக்கிய காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.


Nayanthara to play folk girl in Thirunaal

ஜூன் முதல்வாரமே நயன்தாரா கலந்துகொள்வதாகச் சொல்லப்பட்டது. ஆனால் சொன்ன தேதியில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் போடா போடி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் நயன்தாரா இப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு வர தாமதமானது.


கோதண்டபாணி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.செந்தில்குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார்.


படத்துக்கு இசை - ஸ்ரீ, ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, எடிட்டிங் - வி.டி.விஜயன்.

English summary
Nayanthara plays village girl role for the first time in Ramnath directed Jiiva starrer movie Thirunaal.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil