»   »  ரேவதி இயக்கத்தில் 'தென்னிந்திய குயினாக' நயன்தாரா?

ரேவதி இயக்கத்தில் 'தென்னிந்திய குயினாக' நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

கங்கனா ரணாவத் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் குயின். இந்தியில் வெளியாகி வசூலைக் குவித்த குயின் 2 தேசிய விருதுகளையும் கைப்பற்றியது.

இந்நிலையில் ஹீரோயினை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

குயின்

குயின்

திருமணத்திற்கு முதல் நாள் நாயகியின் திருமணம் நின்றுபோக, தனது தேனிலவிற்கு வாங்கிய டிக்கெட்களை எடுத்துக் கொண்டு ராணி(கங்கனா) வெளிநாடு போகிறாள். அந்தப் பயணத்தில் ராணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, மீண்டும் இந்தியா திரும்பும் ராணி திருமணம் குறித்து எடுக்கும் முடிவு ஆகியவை தான் படத்தின் கதை.

2 தேசிய விருதுகள்

2 தேசிய விருதுகள்

கடந்த 2014ம் ஆண்டு வெளியான இப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகை என 2 தேசிய விருதுகளை வென்றது. 12.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 110 கோடிகளை உலகெங்கும் குவித்தது.

தமிழில்

தமிழில்

இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமைகளை இயக்குநர் தியாகராஜன் கைப்பற்றியிருக்கிறார். முதலில் தியாகராஜன் இயக்கி பிரசாந்த் நடிப்பதாக இருந்தது. இதனால் நயன்தாரா சற்றுத் தயங்கினார். தற்போது ரேவதி இப்படத்தை இயக்க, சுஹாசினி திரைக்கதையை எழுதப் போவதாக கூறுகின்றனர்.

நயன்தாரா

நயன்தாரா

ரேவதியுடன், சுஹாசினி இணைவதால் இப்படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் சொல்லி விட்டாராம். விரைவில் இதுகுறித்து முறையான் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் நாயகனாக நடித்த அதே ராஜ்குமார் ராவ் தான் தமிழிலும் நடிக்கப் போகிறாராம்.

English summary
Sources Said Nayanthara to Play a Leading Role in Queen Tamil Remake. The Official Announcement Expected Soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil