»   »  ஆனாலும்.. ஆனாலும்.. இந்த நயனுக்கு மட்டும் இம்புட்டு மவுசு ஆகாதுப்பா!

ஆனாலும்.. ஆனாலும்.. இந்த நயனுக்கு மட்டும் இம்புட்டு மவுசு ஆகாதுப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு நடிகைக்காக ஒரு படம் ஓடும்... அட இரண்டு படங்கள் கூட ஓடக்கூடும். ஆனால் வரிசையாக ரிலீசாகும் படங்கள் அனைத்துமே பட்டையைக் கிளப்பினால்...

நயன்தாராவின் இன்றைய ராசி உச்சத்திலிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அவர் எந்த மொழியில் நடித்தாலும் அந்தப் படம் சூப்பர் ஹிட்டடிக்கிறது.

வெற்றி

வெற்றி

நயன்தாரா சமீபத்தில் தமிழில் நடித்த மாயா, தனி ஒருவன், நானும் ரவுடிதான் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று அவரை அசைக்க முடியாத இடத்தில் வைத்து விட்டன.

அவரை தங்கள் படத்தில் நடிக்க வைப்பதற்கு பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் நிற்கிறார்கள்.

மலையாளத்தில்

மலையாளத்தில்

நயன்தாராவுக்கு அவரது சொந்த மொழியான மலையாளத்திலும் நல்ல மார்க்கெட் உள்ளது. சமீபத்தில் இவர் நடித்த மலையாள படங்களான ‘பாஸ்கர் திராஸ்கல்', ‘லைப் ஆப் ஜோசுட்டி' படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் அவர் மம்முட்டியுடன் நடித்த ‘புதிய நியமம்' படமும் வெற்றி பெற்றது.

கேரளாவில் மாயா

கேரளாவில் மாயா

இது மட்டுமல்ல தமிழில் நயன்தாரா நடித்த படங்களும் கேரளாவில் அமோக வரவேற்பை பெற்று ஓடுகின்றன. நயன்தாரா தமிழில் நடித்த ‘மாயா' படம் கேரளாவிலும் திரையிடப்பட்டது. இது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஓடுகிறது. ஒரு வாரம் இரண்டு வாரம் அல்ல... அங்கு 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்து இருக்கிறது.

நயன்தான் பிரதானம்

நயன்தான் பிரதானம்

நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஆரி, அம்சத்கான், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவான ‘மாயா' படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

English summary
Nayanthara's Tamil horror flick Maaya has crossed 100 days in Kerala

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil