»   »  காஷ்மோரா... திமிர் பிடித்த ராணியாக நயன்தாரா!

காஷ்மோரா... திமிர் பிடித்த ராணியாக நயன்தாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கார்த்தி, நயன் தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் 'இதற்குதானே ஆசைப்பட்டாய்' கோகுல் இயக்கும் படம் காஷ்மோரா. இதுவரை வெளியான கார்த்தி படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படுவது காஷ்மோராதான். ஏற்கெனவே நாம் சொல்லியிருந்தது போல இது ஒரு பில்லி சூனிய கதை என்பதை ஒப்புக்கொண்டுவிட்டார் கோகுல்.

Nayanthara's negative role in Kashmora

படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரண்டு ஹீரோயின்கள் இருப்பதால் யார் கார்த்திக்கு ஜோடி என்பது சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். நயன்தாராவுக்கு இதில் திமிர் பிடித்த ராணி கேரக்டராம். ஃப்ளாஷ்பேக்கில்தான் சரித்திர போர்ஷன் வருகிறது. எனவே இப்போது நடக்கும் கதையில் கார்த்திக்கு நயன்தாரா ஜோடியாகவும் ராஜா காலத்து கதையில் கார்த்திக்கு நயன்தான் வில்லி என்றும் சொல்கிறார்கள்.

நடிகர் விவேக் இதில் கார்த்திக்கு அப்பாவாக நடிக்கிறார். ஸ்ரீதிவ்யாவுக்கு துப்பறியும் நிருபர் கேரக்டராம். இவர்களைத் தவிர வழக்கு எண் மனீஷாவும் படத்தில் இருக்கிறார்.

கார்த்திக்கு மொத்தம் மூன்று கேரக்டர்கள் என்கிறார்கள். இப்போதுதான் சூர்யா மூன்று கேரக்டர்களில் 24 படத்தில் நடித்தார். இது தம்பி டர்ன்!

English summary
Sources say that Nayanthara is playing a negative role in Karthi's Kashmora.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil