ஆக்சிஜன்... நயன்தாராவின் புது பட டைட்டில் தான் இது

சென்னை : தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா அடுத்தடுத்து பல மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிகளைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார் நயன்தாரா.

ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா, அடுத்தபடியாக அவரின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான டப்பிங் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பு

ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பு

படங்களில் நடிப்பதுடன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நடத்தி வரும் ரெளடி பிக்சர்ஸ் பேனரில் பல படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரித்த கூழாங்கல் படம் பல சர்வதேச விருதுகளை வென்ற பிறகு, தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அடுத்தபடியாக கவின் நடிக்கும் ஊர்க்குருவி படத்தையும் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். ரெளடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராக்கி படம் டிசம்பர் 23 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

மெகா பட்ஜெட் படங்கள்

மெகா பட்ஜெட் படங்கள்

விஜய் சேதுபதி, சமந்தாவுடன் காத்து வாக்கல ரெண்டு காதல், ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் லயன், சிரஞ்சீவியுடன் காட்ஃபாதர், அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கும் கோல்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் பல படங்களின் ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

நாயகிக்கான கதை

நாயகிக்கான கதை

மெகா ஸ்டார்களின், மெகா பட்ஜெட் படங்களில் மட்டுமல்ல நாயகியை மையமாகக் கொண்ட கதைகளைக் கொண்ட படங்கள், அழுத்தமான கதைகளில் நயன்தாரா நடித்து வருகிறார். அப்படி அவர் நடிக்கும் படம் தான் அஸ்வின் சரவணன் இயக்கும் கனெக்ட். அப்படி அறிமுக இயக்குனரான ஜி.வி.விக்னேஷ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

நயனின் புது பட டைட்டில்

நயனின் புது பட டைட்டில்

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு பவர்ஃபுல்லான டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்திற்கு ஆக்சிஜன் என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் டைட்டில், ஃபஸ்ட்லுக்குடன் வெளியிடப்பட உள்ளதாம். இதுவும் நாயகியை மையமாகக் கொண்ட கதை என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X