»   »  மாயாவைத் தொடர்ந்து மீண்டும் ஒரு திகில் படத்தில் நயன்தாரா

மாயாவைத் தொடர்ந்து மீண்டும் ஒரு திகில் படத்தில் நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாயா படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் அதே போன்று ஒரு கதையில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த 2015 ம் வருடம் தமிழ்த் திரையுலகினருக்கு மோசமாக அமைந்த போதிலும் நயன்தாராவுக்கு நல்லதொரு ஆண்டாகவே அமைந்திருக்கிறது.

இந்த ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான தனி ஒருவன், மாயா, நானும் ரவுடிதான் ஆகிய 3 படங்களும் வரிசையாக வெற்றி பெற்றன.இதனால் ஹாட்ரிக் நாயகி என்ற அந்தஸ்து நயன்தாராவுக்கு கிடைத்தது.

Nayanthara's Next Movie

நயன்தாரா ஜீவாவுடன் இணைந்து நடித்த திருநாள் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் அடுத்ததாக ஒரு திகில் கலந்த காமெடிக் கதையில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

சற்குணத்தின் நீண்ட நாள் உதவியாளர் தாஸ் என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். தாஸ் சொன்ன கதை நயன்தாராவிற்கு பிடித்துப் போனதால் அவர் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாக கூறுகின்றனர்.

சற்குணம் தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாயா போன்று இந்தப் படமும் ஒரு திகில் கலந்த காமெடி கதைதானாம்!

English summary
After Maya Nayanthara Again Signs a Horror Film, The Official Announcement of this Film will be Released Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil