»   »  பவருக்கே ஷாக் கொடுத்த நயன்தாரா

பவருக்கே ஷாக் கொடுத்த நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

கோலிவுட்டின் முன்னணி நாயகியாக உள்ளவர் நயன்தாரா. படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். தெலுங்கு திரையுலகிலும் அவருக்கு நல்ல மவுசு உள்ளது.

நயன்தாரா

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அஜீத்தின் வேதாளம் படத்தின் தெலுங்கி ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஏ. எம். ரத்னம் தயாரிக்கிறார். பவனுக்கு ஜோடியாக நடிக்க ரத்னம் நயன்தாராவிடம் கேட்டார்.

நயன்தாராவோ முடியாது என்று சட்டென்று கூறிவிட்டாராம். சீனியர் ஹீரோவுடன் நடித்தால் காதல் காட்சியில் டூயட் பாட வைத்து அனுப்பிவிடுவார்கள் என்பதால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

பவன் கல்யாண் அஜீத்தின் வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, Nayanthara has refused to act with Pawan Kalyan in the telugu remake of Ajith's Vedhalam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil