»   »  பொங்கலுக்கு நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு, திருநாள்!

பொங்கலுக்கு நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு, திருநாள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயன்தாரா நடித்த இரு படங்கள் வரும் பொங்கலன்று வெளியாகவிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஒரே நடிகை நயன்தாராதான். அவர் நடிக்கும் படங்கள் வசூலை அள்ளுகின்றன.


இந்த ஆண்டு நயன்தாரா நடித்த நண்பேன்டா, மாசு, தனி ஒருவன், மாயா, நானும் ரவுடிதான் போன்ற படங்கள் வெளியாகின. இவற்றில் மாசு தவிர மீதிப் படங்கள் நல்ல வசூல்.


Nayanthara's Thirunaal, Ithu Namma AAlu on Pongal Day

மலையாளத்தில் லைப் ஆப் ஜோசுட்டி, பாஸ்கர் தி ராஸ்கல் போன்ற படங்கள் வெளியாகின.


ரூ 2 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நயன்தாரா கைவசம் இப்போதும் அரை டஜன் படங்கள் உள்ளன.


இந்த நிலையில் ஜீவாவுடன் நயன்தாரா நடித்துள்ள ‘திருநாள்' படம் பொங்கல் தினத்தில் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


இதுபோல் சிம்புவுடன் நயன்தாரா நடித்துள்ள ‘இது நம்ம ஆளு' படமும் பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது.


பொங்கலுக்கு வர இருக்கும் படங்களில் இரண்டு நயன்தாரா நடிப்பில் வர இருப்பது அவர் காட்டில் மழை என்பதை காட்டுவதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


பாண்டிராஜுக்கும்..


இதேபோல் பாண்டிராஜ் இயக்கத்திலும் பொங்கல் தினத்தில் 2 படங்கள் வர இருக்கின்றன. பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் பசங்க 2 மற்றும் கதகளி படங்களை பாண்டிராஜ்தான் இயக்கியுள்ளார்.

English summary
Nayanthara starrer Thirunaal, Ithu Namma Aalu movies are going to release on Pongal day.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil