»   »  டூப்புக்கு நோ.. ஆக்ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பிய நயன்!

டூப்புக்கு நோ.. ஆக்ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பிய நயன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீ எங்கே என் அன்பே படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து இயக்குநரை அசத்தியுள்ளார் நயன்தாரா.

பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா தமிழ், தெலுங்கில் உருவாக்கும் படம் நீ எங்கே என் அன்பே. இந்தியில் வெளியான கஹானியின் ரீமேக் இது.

நயன்தாரா

நயன்தாரா

இந்த இரு மொழிகளிலும் நாயகியாக நடிக்கிறார் நயன்தாரா. ஒரிஜினல் படத்தில் ஹீரோயின் கர்ப்பிணியாக வருவார். ஆனால் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்கவில்லை. திருமணமான புதுமணப்பெண்ணாக வருகிறார்.

நடிக்க ஸ்கோப்

நடிக்க ஸ்கோப்

ஆரம்பம், ராஜா ராணி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிக்சர் அடித்திருக்கும் நயன்தாராவுக்கு நடிக்க ஏக வாய்ப்புள்ள ரோல் வேறு.

எதிர்ப்பார்ப்பு

எதிர்ப்பார்ப்பு

தமிழ் தெலுங்கு என கிட்டத்தட்ட ஆறு படங்களில் கமிட் ஆகியிருக்கும் நயன்தாரா அதிகம் எதிர்பார்ப்பது என் அன்பே நீ எங்கே என்ற திரைப்படத்தைதானாம். இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம் இத்திரைப்படத்திற்காக நயன்தாரா ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருப்பதும் ஒரு காரணம் என்கின்றனர் படக்குழுவினர்.

நகங்களை வெட்டினார்

நகங்களை வெட்டினார்

இதுகுறித்து பேசிய இயக்குனர் ஷேகர் கம்முலா "என் அன்பே நீ எங்கே திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தைப் பற்றி யோசித்தபோது நான் அந்த கதாபாத்திரத்தை அதிக நகம் இல்லாதவராகத்தான் கற்பனை செய்துவைத்திருந்தேன். இதைப் பற்றி நான் நயன்தாராவிடம் கூறியதுமே அவரது நகங்களை வெட்டிக்கொண்டார்.

டூப் இல்லாமல்

டூப் இல்லாமல்

மேலும் சில ஆக்‌ஷன் காட்சிகளுக்காக டூப் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னபோதும், வேண்டாம் நானே நடிக்கிறேன் என்று ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் நயன்தாரா," என்றார்.

English summary
Actress Nayanthara has done some risky fight sequences in Nee Engey En Anbey without dupe.
Please Wait while comments are loading...