»   »  காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா?

காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டாராம்.

எஸ் 3 படத்தை அடுத்து சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. படத்திற்கு தானா சேர்ந்த கூட்டம் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் அஜீத்தை நடிக்க வைக்க தான் முதலில் முயற்சி செய்யப்பட்டது.

நயன்தாரா

நயன்தாரா

சூர்யாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின. காதலரின் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

இல்லை

இல்லை

காதலர் விக்னேஷ் சிவன் படத்தில் நடித்தால் தினமும் தங்களை பற்றி பல வதந்திகள் பரவும் என்று நினைக்கிறார் நயன்தாரா. இதனால் விக்கி படத்தில் நடிக்க மறுத்து வேறு ஹீரோயினை பார்க்குமாறு கூறியுள்ளாராம்.

சூர்யா

சூர்யா

முத்தையா படத்தில் நடிக்க யோசித்துக் கொண்டிருந்த சூர்யாவிடம் பேசி விக்னேஷ் சிவன் படத்தில் அவரை நடிக்க வைத்ததே நயன்தாரா தான் என்று கூறப்படுகிறது.

கோவில்

கோவில்

தானா சேர்ந்த கூட்டம் வெற்றி பெற வேண்டி நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கும்பகோணம் சென்று அங்குள்ள கோவில் ஒன்றில் சிறப்பு பூஜை செய்துள்ளனர்.

English summary
Buzz is that Nayanthara has refused to act in alleged boyfriend Vignesh Shivan's upcoming movie with Suriya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil