»   »  நயன்தாராவும் நேசமான 5 பேய்களும்...

நயன்தாராவும் நேசமான 5 பேய்களும்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் இது பேய்களின் காலமாகி விட்டது. ஒரு பேய் படம் வெற்றி பெற்றுவிட்டால் அதே பாணியில் பேயை களமிறக்கி படமெடுக்கின்றனர். பல பேய் படங்கள் வெற்றி பெற்றாலும் சரியான கதையம்சம் இல்லாத பேய் படங்கள் தோல்வியை தழுவுகின்றன. இருந்தாலும் கோலிவுட்டில் பேய் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

நயன்தாரா நடித்த மாயா வெற்றி பெற்றது. அதே நேரத்தில் சூர்யா உடன் மாசு என்கிற மாசிலாமணி படம் அந்த அளவிற்கு ரசிகர்களை சென்றடைய வில்லை. மாயா படத்தின் பாணியில் மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். நயன்தாரா நடித்த மாயா என்ற பேய் படம் வெற்றியடைந்தது. தெலுங்கில் மயூரி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

லேடி சூப்பர் ஸ்டார்

லேடி சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு புகழின் உச்சியில் நிற்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா. இவரது இரண்டாவது இன்னிங்ஸ்தான் வெற்றிகரமான படங்களை அளித்துள்ளது.

2015ல் வெற்றிப் படங்கள்

2015ல் வெற்றிப் படங்கள்

இந்த ஆண்டில் வெளியான மாயா, தனி ஒருவன், நானும் ரவுடிதான் ஆகிய படங்கள் தொடர் வெற்றியையும் பெற்றது இதன் மூலம் வெற்றி படங்களின் கதாநாயகியாக மாறியிருக்கிறார் நயன்தாரா.

புதிய திகில் படம்

புதிய திகில் படம்

இவரது நடிப்பில் இந்த வருடம் வெளியான மாயா திரைப்படத்தில் சோலோ ஹீரோயினாக தனது வெற்றியை நிலைநாட்டினார் தற்போது மீண்டும் ஒரு புதிய திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம் நயன்தாரா. இதிலும் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட திகில் கதைக்களமாக இந்த படத்தை உருவாக்கவிருக்கிறார்களாம் படக்குழுவினர்.

அதிரடி அச்சுறுத்தல்

அதிரடி அச்சுறுத்தல்

இப்படத்தை களவாணி, வாகை சூடவா ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் தயாரிக்கிறார். இப்படத்தை சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கவுள்ளார். நயன்தாரா இதையும் வெற்றிப்படமாக்குவார் என்கின்றனர் படக்குழுவினர்.

ரெடியாக உள்ள படங்கள்

ரெடியாக உள்ள படங்கள்

நயன்தாரா நடிப்பில் தற்போது திருநாள், இது நம்ம ஆளு படங்கள் விரைவில் வெளியாக தயராகவுள்ளது, மேலும் தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இதர படங்களை முடித்துவிட்டு இந்த படத்தில் நயன்தாரா நடிப்பர் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

5வது பேய் படம்

5வது பேய் படம்

மலையாளத்தில் பேய் படமொன்றில் நடித்த நயன்தாரா, தமிழில் ரஜினிகாந்துடன் சந்திரமுகி, சூர்யாவுடன் மாசு என்கிற மாசிலாமணி, மாயா போன்ற திகில் படங்களில் நடித்து இருக்கும் நயன்தாரா மேலும் ஒரு பேய் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். பேய் படங்களில் நடிப்பது எனக்கு பழகிவிட்டது என்கிறார் நயன்தாரா. இது எப்படி இருக்கு?

English summary
Actress Nayanthara, the most sought after actress in the southern cinema, has now signed yet another horror flick, after a thrilling performance in Maya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil