»   »  கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது துணிந்து இப்படியொரு ரிஸ்க் எடுத்துள்ள நயன்தாரா

கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது துணிந்து இப்படியொரு ரிஸ்க் எடுத்துள்ள நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது நயன்தாரா இளம் ஹீரோவுக்கு அக்காவாக நடித்து வருகிறார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார் நயன்தாரா. அவர் எத்தனை கோடி கேட்டாலும் கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்கள்.


சீனியர் ஹீரோயினாக இருந்தாலும் இளம் ஹீரோக்கள் அனைவரும் நயனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார்கள்.


அக்கா

அக்கா

இளம் ஹீரோக்கள் நயன்தாராவுக்கு அடிபோட அவரோ கெரியரின் உச்சத்தில் இருக்கின்ற நேரத்தில் துணிந்து ரிஸ்க் எடுத்து அதர்வாவுக்கு அக்காவாக நடித்து வருகிறார்.


அதர்வா

அதர்வா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா டாக்டராக நடித்து வரும் இமைக்கா நொடிகள் படத்தில் தான் நயன்தாரா அவருக்கு அக்காவாக நடிக்கிறார். கதைப்படி நயன் ஒரு சிபிஐ அதிகாரி.


அம்மா

அம்மா

படத்தில் அக்கா வேடம் மட்டும் அல்ல 4 வயது குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறார். நயன்தாராவின் இந்த துணிச்சல் பிற நடிகைகளை வியக்க வைத்துள்ளது.


அறம்

அறம்

விவசாய பிரச்சனைகளை பற்றி பேசும் அறம் படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. ஆனால் படத்தை வாங்க யாரும் முன்வராததால் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


English summary
Nayanthara is at the peak of her career but that doesn't stop her from acting as a young hero's sister in the upcoming movie Imaikka Nodigal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil